எல் - நினோ பற்றி தெரியுமா? இதனால் எந்தெந்த நாடுகளுக்கு பாதிப்பு?
எல்-நினோ என்பது இந்த நூற்றாண்டின் இயற்கையின் இன்னுமொரு காண இயலாத, ஆனால் உணரக்கூடிய புதிய கோர முகத்தின் ஒரு பார்வையே ஆகும்.. இதை பற்றி நமது ராணி ஆன்லைனில் காண்போம் வாருங்கள்
எல்-நினோ என்பது இந்த நூற்றாண்டின் இயற்கையின் இன்னுமொரு காண இயலாத, ஆனால் உணரக்கூடிய புதிய கோர முகத்தின் ஒரு பார்வை ஆகும். இதைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.
எல்-நினோ (El -nino ) என்பது பசிபிக் பெருங்கடலின் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை குறிக்கிறது. அதாவது குறிப்பிட்ட காலங்களுக்கு ஒருமுறை பசிபிக் கடல்பரப்பின் வெப்பநிலையானது சராசரி வெப்பநிலையினை விட அதிகமாக இருக்கும். பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை உயர்வைத்தான் எல் நினோ என்கிறார்கள்.
இவ்வுலக மக்கள் இன்னும்கூட இதை அறியாமல் இருப்பது சற்று ஆச்சரியம்தான். சுனாமி வரும் வரைக்கும் அதனைப் பற்றி அறியாத மக்கள் வந்த பின்பு ஓலமும் ஒப்பாரியும் வைத்தனர். அதே போன்று இந்த எல்-நினோ முழு உருவம் பெற்று தனது கோர முகத்தை காண்பிக்கும்போது என்ன செய்ய போகிறார்கள் என்பது தெரியவில்லை. எல்லாம் சரி இந்த எல்-நினோ எப்போது பூமிக்கு வந்தது? 1997 ஆம் ஆண்டு அவதரித்ததாக கருதப்படும் இதன் தாக்கத்தை சற்று பார்ப்போம். எல்-நினோ என்பது வெப்ப நீரோட்டத்தால் வருகின்ற ஆண்டுகளில் இந்தியாவில் பருவமழை குறையும் என்றும், அதனால், கடும் வறட்சி ஏற்படலாம் என்றும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பசிபிக் கடலின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம்தான், இந்திய வானிலை மாற்றங்களை தீர்மானிக்கிறது. இந்த வெப்பநிலை சீராக இருந்தால், இந்தியாவின் வானிலை வழக்கப்படி இருக்கும். இல்லாவிட்டால் மாறுதல் ஏற்பட்டு, கடும் வறட்சியோ அல்லது அதிக மழைப்பொழிவோ ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் மேற்கு பசிபிக் கடலோர வெப்ப அளவு மற்றும் கடல் அழுத்தத்தை கணக்கிட்டு, இந்தியாவின் பருவநிலை கணக்கிடப்படுகிறது. இதனால் பருவமழை தள்ளிப்போகும் என்று கூறப்படுகின்றது. இந்த ஆண்டு, வழக்கத்திற்கு மாறாக எல்-நினோ எனப்படும் வெப்ப நீரோட்டத்தின் வெப்ப அளவு அதிகரித்துள்ளது. இதற்கு புவி வெப்பம் அதிகரித்துள்ளதே காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், எல்-நினோவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் பருவமழை பெய்யவேண்டிய மாதங்களில், எல்-நினோவின் நிலைப்பாடு அச்சமூட்டுவதாக உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 'வளி மண்டலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் எல்-நினோ வழக்கத்திற்கு முன்னதாகவே உருவாகலாம். இதுபோன்ற மாற்றங்கள் ஒவ்வொரு மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதுபோன்ற நேரங்களில், இந்தியாவின் பருவமழை பொழிவு குறையும்' என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டு வகையான எல்-நினோக்கள்
எல்-நினோ
எல்-நினோ என்று அழைக்கப்படும் பருவநிலை மாற்றங்களில்கூட இரண்டு வகைகள் உள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முதலாவது எல் நினோ, இரண்டாவது லா-நினா. லா-நினா என்பது பசிபிக் கடலில் இயற்கையாக ஏற்படக்கூடிய காலநிலை மாற்றம். இது உலகளாவிய வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். பசிபிக் பெருங்கடலில் சராசரி வெப்பநிலை அளவு குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகரிப்பது எல் நினோ. அதாவது கடலில் வெப்பநிலை 0.8% அதிகரிக்கும்போது எல் நினோ உருவாகிறது. இந்த நிகழ்வு சராசரியாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லா-நினோ
எல் நினோவுக்கு எதிர்மறையாக நடப்பது லா நினோ. கடல் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக குறைந்து குளிர்ச்சியான நிலை உருவாகும். எல் நினோ முடிந்து லா நினோ உருவாகும். இந்தாண்டு சூப்பர் எல் நினோ நிகழ்வு நடைபெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த ஆண்டு வெப்பம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல் நினோ வெப்பநிலை அளவு 0.8% ஆக இருந்தால் நல்லது. ஆனால் எல் நினோவின்போது1.5 முதல் 2% வரை வெப்பநிலை உயர்வடைவதால் இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். சூப்பர் எல் நினோ தாக்கத்தால் உலகின் வெப்பநிலை முதன்முறையாக 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை.விடுத்துள்ளனர்.
எல் நினோவால் பாதிப்பிற்குள்ளாகப் போகும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. எல் நினோவின் தாக்கத்தால் இவ்வாண்டு தொடங்கி 3 முதல் 5 ஆண்டுகள் வரை இந்த தட்பவெப்ப நிலை நீடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் தீவிர மழை, சூறாவளி, திடீர் வெள்ளம் போன்ற அசாதாரண நிலை உருவாகும். உலகின் மற்ற பகுதிகள் காட்டு தீ, வறட்சி, தாக்கம் ஏற்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக தென் ஆப்ரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தீவிர வெப்பநிலை, வறட்சியால் பாதிக்கக்கூடும். ஏற்கனவே இந்தியாவில் வெப்ப அலை தாக்கம் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. இதே நிலை நீடித்தால் இது பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தி குடிநீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பூமி வெப்பமயமாதலின் வரம்பு 2027 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிகரி செல்சியல் கடக்க 66 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எல் நினோதான் காரணம் என்றாலும் மனிதர்களும் கூட ஒருவகையில் காரணம் ஆராய்ச்சியாளர்கள் என்கின்றனர். தொழிற்துறை வளர்ச்சி, புதைப் படிவ எரிபொருள் பயன்பாடு உள்ளிட்ட மனித நடவடிக்கைகள்தான் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர். இந்த எல் நினோவினால் வெள்ளம், புயல், கடும் வறட்சி, அதிகப்படியான வெப்பம் என மாறி மாறி மனித இனத்தை வாட்டவும் மற்ற உயிரின வாழ்வதாராத்தையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. உயர்ந்து வரும் உலக வெப்பநிலையை கட்டுப்படுத்த பசுமை வாயுக்களின் உமிழ்வை குறைக்க உள்ளதாக உலகத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளபோதிலும் எல் நினோ போன்ற இயற்கையின் தட்பவெப்ப நிகழ்வு என்பது பூமியில் மனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தும் விதத்தில்தான் உள்ளது.
ஆம். இந்த எல் நினோவின் பாதிப்பு என்பது உலகமுழுவதும் ஆளுகை செய்யப் போகும் என்பது மட்டும் நிஜமாகியுள்ளது. இதற்கு தப்பித்து கொள்ள ஒரே வழி நமது அன்னை பூமியை மாசுபடுத்தாமலும் இன்ன பிற இயற்கை வளங்களையும் இயற்கையையம் மனிதன் தன சுயநலத்திற்க்காக சுரண்டமலிருப்பதும் ஆகும்