பாரம்பரியமிக்க ஐயர் ஆத்து டாங்கர் பச்சடி ரெசிபி! இப்படி செஞ்சு அசத்துங்க!
சமையல் பகுதியில் நாம் பார்க்க இருப்பது பாரம்பரியம் மாறாமல் ஐயர் ஆத்தில் செய்யப்படும் எத்தனையோ பச்சடி வகைகளில் முதன்மையாக காணப்படும் டாங்கர் பச்சடி செய்வது எப்படி என்பது பற்றித்தான்.;
ஐயர் ஆத்து சமையல் என்றாலே அதற்கென்று ஒரு தனி சுவையும், மனமும் இருக்கும். அதிலும் அவர்கள் வைக்கும் சாதாரண வத்தல் குழம்பில் ஆரம்பித்து பல உணவுகள் எப்படி இவ்வளவு சுவையாக அவர்களால் மட்டும் செய்ய முடிகிறது என்று பலரிடத்திலும் ஒரு கேள்வியும், ஆச்சரியமும் இருக்கும். அந்த வகையில், இந்த வாரம் நமது ராணி ஆன்லைன் சமையல் பகுதியில் நாம் பார்க்க இருப்பது பாரம்பரிய டாங்கர் பச்சடி செய்வது எப்படி என்பது பற்றித்தான். அதென்ன டாங்கர் பச்சடி? கேள்விப்படாத ஒன்றாக இருக்கிறதே! என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சுவைமிகுந்த இந்த ரெசிபியை நேயர் விருப்பத்திற்காக நமக்கு செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் திருமதி.சாரதா சந்திரசேகர்.
டாங்கர் பச்சடி செய்முறை
அடுப்பை பற்ற வைத்து கடாய் சூடானதும் அதில் உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த உளுத்தம் பருப்பை சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த உளுத்தம் பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து தயாராக வைக்கப்பட்டுள்ள தயிரில் உருண்டை ஆகாமல் நன்கு கலந்து விடவும்.
பச்சடிக்காக உளுத்தம் பருப்பு வறுத்தல்
இப்பொழுது அடுப்பில் ஒரு குழிக்கரண்டியை வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து உளுத்தம் பொடி கலக்கப்பட்ட அந்த தயிரில் போட்டால் நீங்கள் எதிர்பார்த்த சுவை மிகுந்த டாங்கர் பச்சடி தயார்.
கடுகு, சீரகம் தாளிப்பு
டாங்கர் பச்சடி பயன்கள்
இந்த டாங்கர் பச்சடியை வெங்காயம், தேங்காய் போன்ற எல்லாவிதமான துவையல் உடனும் சேர்த்து சாப்பிடலாம்.
காய்கள் எதுவும் இல்லாதபோது விருந்தினர்கள் வந்துவிட்டார்கள் என்றால் உடனே வீட்டில் இருக்கும் தயிர், மற்றும் வறுத்து அரைத்து வைக்கப்பட்டுள்ள உளுத்தம் பருப்பு பொடியை தூவி தாளித்து மணம்மிக்க இந்த டாங்கர் பச்சடியை செய்து கொடுத்து அசத்தி விடலாம்.
பரிமாற தயாராக டாங்கர் பச்சடி
புளி சாதம், தேங்காய் சதாம், லெமன் சாதம் போன்ற கிளரிய சாதங்களுடன் இதனை சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
வெயில் காலத்திற்கு ஏற்ற மிகவும் எளிமையாக செய்து அசத்தக் கூடிய ஒரு உணவு வகை இது.
வயிற்றுக்கும் எந்த ஒரு உபாதையையும் ஏற்படுத்தாது.