வாயில் வைத்ததும் கரையக்கூடிய நெய் பிஸ்கட்! 10 நிமிடங்களில் செய்யலாம்!

பிஸ்கட்டில் நிறைய வகைகள் உண்டு. உப்பு பிஸ்கட், பட்டர் பிஸ்கட், நெய் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட், முந்திரி பிஸ்கட் என நிறைய வகைகள் இருக்கிறது. டீ கடைகளில் கிடைக்கும் பிஸ்கட்கள் எல்லோருக்கும் பிடித்த ஒன்று தான்.

Update: 2024-06-10 18:30 GMT
Click the Play button to listen to article

பிஸ்கட்டில் நிறைய வகைகள் உண்டு. உப்பு பிஸ்கட், பட்டர் பிஸ்கட், நெய் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட், முந்திரி பிஸ்கட் என நிறைய வகைகள் இருக்கின்றன. டீ கடைகளில் கிடைக்கும் பிஸ்கட்கள் எல்லோருக்கும் பிடித்த ஒன்றுதான். நண்பர்களுடன் டீக்கடையில் அண்ணா ஒரு டீ-ன்னு சொல்லி கையில நாலு பிஸ்கட் எடுத்து சாப்பிட ஆரம்பித்தா... கணக்கே இல்லாமல் சாப்பிட்டுக்கிட்டே இருக்க தோணும். நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு உள்ளது. இது உடலுக்கு நல்லது. மேலும் நெய்யில் வைட்டமின் ஈ மற்றும் டி உள்ளது. அதோடு மிக சில உணவுகளில் மட்டுமே இருக்கக்கூடிய லினோலிக் அமிலம் நெய்யில் அதிகமாக உள்ளது. பாரம்பரிய உணவுகள் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்தையும், ஆற்றலையும் கொடுக்கின்றன. கோதுமை, வரகு மாவு, தினை மாவு, குதிரைவாலி என சிறுதானியங்களில் பிஸ்கட்களை செய்து சாப்பிடுவது உடலுக்கு மேலும் வலு சேர்க்கும். அந்த வகையில், இந்த வாரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி உண்ணும் நெய் பிஸ்கட் பற்றி பார்ப்போம். வாயில் வைத்ததும் கரையக்கூடிய நெய் பிஸ்கட்டை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ரொம்ப ஈஸியா எப்படி செய்யலாம் என சொல்லிக்கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் தாமரை செல்வி.


செய்முறை:

* முதலில் மைக்ரோவேவ் ஓவனை 170 டிகிரியில் சூடு பண்ண வேண்டும். ஓவன் சூடாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பாத்திரத்தில் 150 கிராம் மைதா மாவு அல்லது கோதுமை மாவு சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு பின்ச் உப்பு, ஒரு பின்ச் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.


நெய் பிஸ்கட் செய்ய தேவையான மைதா மாவு 

* வெள்ளை சர்க்கரையை 50 கிராம் எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* அரைத்த வெள்ளை சர்க்கரை பொடியை, மைதா மாவில் கொட்டி நன்கு கலந்துக்கொள்ள வேண்டும்.

* அதில் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை பால்கோவா பதத்தில் பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.


மைதா மாவு கலவையை நெய் ஊற்றி பால்கோவா பதத்தில் பிசைந்து எடுத்துக்கொள்ளும் காட்சி 

* பிசைந்து வைத்துள்ள மைதா மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பேக்கிங் ட்ரேயில் வைக்க வேண்டும்.

* பிஸ்தா, முந்திரி, பாதாம் போன்றவற்றை உருண்டைகளின் மேலே டாப்பிங்காக வைக்கலாம் அல்லது உள்ளே வைத்து உருட்டி பேக் பண்ணலாம்.


பேக்கிங் ட்ரேயில் தயார் செய்யப்பட்ட நெய் பிஸ்கட் 

* உருட்டி எடுத்த எல்லா உருண்டைகளையும் பேக்கிங் ட்ரேயில் வைத்து 10 நிமிடங்களுக்கு பேக் பண்ணி எடுத்தால் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த நெய் பிஸ்கட் ரெடி!

நெய்யில் உள்ள நன்மைகள், பயன்பாடுகள்:

* வயது முதிர்வால் சிலருக்கு மூட்டு வலி, எலும்பு தேய்மானம், எலும்பு மஜ்ஜையில் ஈரத்தன்மை குறைவு என எலும்பு சார்ந்த பிரச்சினைகள் அதிகம் வரும். அப்படிப்பட்டவர்கள் நெய்யை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் எலும்புகள் வலிமைபெறும்.

* சரும பராமரிப்புக்கு நெய் மிகவும் உகந்தது. உடலில் உள்ள மெலனின் அதிகரிக்க நெய் உதவியாக இருக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் நெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

* வல்லாரைக்கு இணையான ஞாபக திறனை நெய் கொடுக்கும். நெய்யை உட்கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். நியாபக மறதி உள்ளவர்கள் வல்லாரை கீரையை நெய்யில் வாட்டி சாப்பிடலாம்.

* நெய்யில் இயற்கையிலேயே புற்றுநோய் செல்களை செயல்படாமல் வைக்கும் தன்மை நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியையும் நெய் அளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்