அட்டகாசமான தால் கிச்சடி ரெசிபி! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!

தென்னிந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமாக இருப்பது கிச்சடி.;

Update:2025-04-01 00:00 IST
Click the Play button to listen to article

தென்னிந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமாக இருப்பது கிச்சடி. அப்படிப்பட்ட கிச்சடியை பற்றி சொன்னதும் பலருக்கும் ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, அரிசி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி என்று அவரவருக்கு விருப்பமான வகைகளில் செய்யக்கூடிய கிச்சடிகள்தான் நினைவில் வந்து போகும். ஆனால் இன்று இவற்றில் இருந்து சற்று வித்தியாசமாகவும், பலரையும் கவரும் வகையிலும் மிகவும் எளிமையான முறையில் தால் கிச்சடி செய்வது எப்படி என்பதை நமக்கு செய்து காட்டுகிறார் ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் லோகேஸ்வரன் தமிழரசன்.


தால் கிச்சடி செய்முறை

அடுப்பை பற்ற வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கொஞ்சம் சீரகம், பொடி பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

வெங்காயம் கலர் மாறுவதற்கு முன்பாக சிறிதளவு மஞ்சள் தூள், உப்புடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து லேசாக கொதிக்க விடவும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை போட்டு அதனுடன் மசித்து வைக்கப்பட்டுள்ள பாசுமதி சாதத்தையும் சேர்த்து வேகவிடவும்.


கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு வேகவிடுதல்

இதனை தொடர்ந்து, வேகவைத்து மசித்து வைக்கப்பட்டுள்ள பாசிப்பருப்பையும் சேர்த்து கிளறி விடவும்.

இப்பொழுது சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகும் தருணத்தில் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வேகவிடவும்.

இதற்கு பிறகு சுவையை கூட்ட பட்டர் மற்றும் நெய் இரண்டையும் சேர்க்கவும்.

இப்பொழுது மேலாக முந்திரி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கெட்டிப்பதமாகும் வரை கிளறி அதனுடன் பிளாக் உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான தால் கிச்சடி ரெடி.


கிச்சடியில் மேலாக முந்திரி சேர்த்தல்  

பாசிப்பருப்பின் நன்மைகள்

பாசிப்பருப்பில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கல் பிரச்சினைகளை சரி செய்கிறது.

பாசிப்பருப்பில் குறைந்த கலோரி மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.


தயார் நிலையில் தால் கிச்சடி 

மேலும் நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு நன்மைகளை அளிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இதய ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்