ஹோட்டல் டேஸ்டில் ரவா கேசரி!

வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் ரவா கேசரி செய்வது எப்படி என்பதை செய்து காட்டுகிறார்கள் வர்ஷா மற்றும் நந்தினி.

Update:2025-02-11 00:00 IST
Click the Play button to listen to article

இனிப்பு இல்லாமல் எந்த உணவும் முழுமை பெறாது. திருமணம் தொடங்கி பிறந்தநாள், பண்டிகைகள் என்று ஒவ்வொரு கொண்டாட்ட விருந்துகளிலும் பிரதான இடத்தை பிடிப்பது இனிப்புகள்தான். அப்படிப்பட்ட இனிப்புகளை வீட்டிலும் எளிமையாக செய்து சாப்பிடலாம். திடீரென வீட்டில் யாராவது ஒருவருக்கு இனிப்பு சாப்பிட வேண்டும்போல் இருக்கிறது என்றால் உடனே செய்வது பாயசம், பால் கொழுக்கட்டை, பால் பணியாரம், அல்வா, ரவா கேசரி போன்ற இனிப்பு வகைகளாகத்தான் இருக்கும். அந்த வகையில் நமது வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் ரவா கேசரி செய்வது எப்படி என்பதை செய்து காட்டுகிறார்கள் வர்ஷா மற்றும் நந்தினி.


ரவா கேசரி செய்முறை

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைக்கவும்.

பாத்திரம் சூடானதும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ரவையை இரண்டு நிமிடம் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் முந்திரி மற்றும் காய்ந்த திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

இப்பொழுது ஒரு கப் ரவைக்கு மூன்று கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் தட்டி வைத்துள்ள ஏலக்காய் மற்றும் வறுத்து வைத்துள்ள ரவையையும் போட்டு கட்டியாகாமல் கிளறவும்.


தண்ணீர் கொதித்ததும் ரவையை போட்டு கிளறுவது

ரவை ஓரளவு வெந்து வரும் நேரத்தில் அதில் எடுத்து வைத்துள்ள சர்க்கரையையும் சேர்த்து கிளற வேண்டும்.

ரவையும், சர்க்கரையும் நன்கு வெந்து கெட்டி பதத்திற்கு வந்த பிறகு, மேலாக வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையோடு ஒரு துளி பைனாப்பிள் எசன்ஸும் போட்டு கிண்டி இறக்கினால் சுவையான ரவா கேசரி ரெடி.

கேசரியை அடுப்பில் இருந்து இறக்குவற்கு முன்பாக, மேலாக ஒரு ஸ்பூன் நெய்விட்டு இறக்கினால் கேசரியின் வாசனையில் வீடே மணக்கும்.

ரவா கேசரியின் நன்மைகள்

அறுசுவைகளில் மிகவும் முக்கியமான ஒன்று இனிப்பு. அப்படிப்பட்ட இந்த இனிப்பு வகைகளை இனிப்பு பண்டங்கள் என்றும் கூறுவது உண்டு. இனிப்பு சேர்மங்களில் மாச்சத்து அதிகம் இருக்கும்.

இனிப்பு சாப்பிடுவதால் மனநிலை ஊக்கமடைவது மட்டுமின்றி, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் எடை இழப்பு ஏற்படாமல் தடுக்க உதவும்.

இதில் குறிப்பாக ரவா அல்லது ரவை என்று சொல்லக்கூடிய ரவையை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் பொழுது, அதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த மிகவும் உதவுகிறது.


ரவை நன்கு வெந்தவுடன் இறுதியாக முந்திரி, திராட்சை போட்டு இறக்கினால் கேசரி ரெடி

ரவையில் நெய் சேர்ப்பதால் அந்த நெய்யிலும் நன்மை பயக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன.

பொதுவாகவே நெய் நமது நினைவாற்றலை அதிகரிக்கச் செய்வதுடன் செரிமானம் போன்ற பிரச்சினைகளையும் சரி செய்யும்.

ரவையில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்