ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்

Update:2025-03-11 00:00 IST

2025 மார்ச் 11-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நான்கு கிரகங்கள் உங்களின் லாபஸ்தானத்தில் இருப்பதால் உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷைகள் எதுவாக இருந்தாலும் அனைத்தும் பூர்த்தியாகும். பொருளாதார கஷ்டங்கள் இருந்தால் ஓரளவு குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஸ்டார்ட் அப் நிறுவனம், இண்டஸ்ட்ரியலிஸ்ட், தொழில் முனைவோராக வர நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எதிர்பாராத நண்பர்கள் கிடைப்பார்கள். நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் அத்தனையும் உண்டு. வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. பிசினஸ் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏதும் இல்லை. வருமானங்கள் இருக்கிறது. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு தற்போது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.  

Tags:    

மேலும் செய்திகள்