தொழில் சுமார்

Update:2025-04-01 00:00 IST

2025 ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், எண்டெர்டெயின்மெண்ட் உள்ளது. கடந்த காலத்தைப் போலவே உங்கள் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தியாக வாய்ப்புள்ளது. நண்பர்கள், மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவீர்கள். வருமானங்கள் உண்டு. ஷேர் மார்க்கெட் போன்ற எந்த யூக வணிகங்களாக இருந்தாலும் சுமாரான முதலீடே செய்யுங்கள். ஓரளவுக்கு ரிட்டன்ஸ் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் தள்ளிப் போயிருந்தால் நல்லது நடக்கும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நிம்மதி உண்டு. சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் இரண்டுமே சுமாராக உள்ளது. வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் முருகனையும், உங்கள் இஷ்ட தெய்வத்தையும் பிரதானமாக வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்