போட்டித்தேர்வுகளில் வெற்றி
2025 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசிநாதன் லாபஸ்தானத்தில் குருவின் நட்சத்திரத்தில் இருப்பதால், உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷைகள் பூர்த்தியாகும். பிரிந்துபோன நண்பர்கள், உறவுகள் மீண்டும் வந்து சேர்வார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் உண்டு. உங்கள் கையில் பணம், தனம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு செலவினங்களும் இருக்கிறது. பேச்சின் மூலமாக வருமானங்கள் வரும். வேலை, வாய்ப்பு பரவாயில்லை. வேலையில் பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ், முன்னேற்றம் ஆகியவை உண்டு. கடன் கேட்டிருந்தால் கிடைக்கும். எல்லாவிதமான போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவீர்கள். தொழில் நன்றாக உள்ளது. மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். இந்த வாரம் முழுவதும், விநாயகர் வழிபாடு மற்றும் துர்க்கையை தரிசனம் செய்யுங்கள்.