ரிசப்ஷனுக்கு போடக்கூடிய சிம்பிளான ஹேர்ஸ்டைல்!

ரிஷப்ஷனுக்கு போடக்கூடிய டிரெண்டியான ஹேர்ஸ்டைல் இது என்கிறார். இந்த ஹேர்ஸ்டைலை ஷார்ட்டான முடியிலும் போட முடியும், நீளமாக முடியிலும் போடமுடியும் என்பதால் முடியின் நீளம் குறித்தெல்லாம் மணப்பெண் கவலைப்பட தேவையில்லை என்கிறார் அவர்.;

Update:2025-03-11 00:00 IST
Click the Play button to listen to article

நீளமான பின்னலின்மீது பூ அலங்காரம் செய்வது பலருக்கும் பிடிக்கும். ஆனால் அதுவே திருமணத்தின்போது பாரம்பரிய முறைப்படி ஹேர்ஸ்டைல் செய்ய ஆசைப்படும் பெண்கள் பலர், ரிசப்ஷனின் போது மாடர்னாக டிரெண்டிங்காக இருக்க நினைப்பார்கள். அதற்கு சிம்பிளாக அதேசமயம் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் போடவேண்டுமென கேட்கும் பெண்களுக்கென்றே பஃப் வைத்து போனிடெய்ல் போடுவது, கர்ளிங் செய்வது, எக்ஸ்டன்ஷன் பொருத்தி க்ளிப்ஸ் போடுவது, பல ஜடைகள் போட்டு அவற்றை ஒன்றாக்கி அலங்கரிப்பது என பல ஹேர் ஸ்டைல்கள் செய்யப்படுகின்றன. ஆனால் அதுபோன்ற ஹேர்ஸ்டைல்களை செய்ய அதிக நேரம் தேவைப்படும். அவர்களுக்காகவே பிரத்யேகமாக சிம்பிள், அதேசமயம் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் ஒன்றை செய்துகாட்டுகிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா. குறிப்பாக ரிசப்ஷனுக்கு போடக்கூடிய டிரெண்டியான ஹேர்ஸ்டைல் இது என்கிறார். இந்த ஹேர்ஸ்டைலை ஷார்ட்டான முடியிலும் போட முடியும், நீளமான முடியிலும் போடமுடியும் என்பதால் முடியின் நீளம் குறித்தெல்லாம் மணப்பெண் கவலைப்பட தேவையில்லை என்கிறார் அவர்.

எளிமையான சிகை அலங்காரம்

ஹேர் ஸ்டைல் செய்வதற்கு முன்பு முடி அடர்த்தியாக தெரியவும், மேலே தூக்காமல் இருக்கவும் மூஸ் மற்றும் சீரம் தடவி செட் செய்யவேண்டும். சில்க்கியான முடி வைத்திருப்பவர்கள் அதிலேயே ஹேர்ஸ்டைல் செய்யலாம். ஒருசிலருக்கு கர்ளிங்காகவோ அல்லது வேவியாகவோ இருந்தால் அதை ஸ்ட்ரெய்ட்டனிங் அல்லது க்ரிம்பிங் செய்துகொள்ளலாம். இதனால் முடி அடர்த்தியாக தெரியும்.


மேலே ரப்பர் பேண்டு போட்டு இரண்டாக பிரித்து பின்னல் போட்டு இழுத்துவிடுதல்

முன்பகுதியில் பஃப் வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் சாதாரணமாக சீவினாலே போதும். பேபி ஹேர் வெளியே தெரியாமல் இருக்க ஸ்ப்ரே அடிக்கலாம் அல்லது ஹேர் பின் குத்திக்கொள்ளலாம்.

கீழுள்ள முடியை சிறிய ரப்பர்பேண்டு கொண்டு போனிடெய்ல் போடவேண்டும். அந்த போனிடெய்லில் கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்து பின்னல் போடவேண்டும். முதல் பின்னலுக்கு நடுவில் இருக்கும் முடியை இரண்டாக எடுத்து பின்னி, அடுத்தடுத்து பின்னும்போது இரண்டு பக்கங்களிலும் சிறிது சிறிது முடியை எடுத்து சேர்த்து பின்னிக்கொண்டே வரவேண்டும். அரை ஜான் பின்னிய பிறகு மீண்டும் ஒரு ரப்பர் பேண்டு போடவேண்டும். மேலும் அடர்த்தியாக தெரிய டெயில் கோம்ப் அல்லது கையால் பின்னலின் ஒவ்வொரு பகுதியையும் கலையாமல் மேலே இழுத்துவிட்டுக் கொள்ளலாம்.


பின்னல்களுக்கு நடுவே இரண்டு ரப்பர் பேண்டுகளை இடைவெளி விட்டு போடுதல்

இப்போது ஏற்கனவே ரப்பர் பேண்டு போட்டிருக்கும் பகுதிக்கு கீழ் ஒரு இஞ்ச் இடைவெளி விட்டு மீண்டும் ஒரு ரப்பர் பேண்டு போடவேண்டும். அதற்கு கீழ் முன்பு போட்டதுபோன்றே பின்னல் போட்டுக்கொண்டே வரவேண்டும்.

சிலருக்கு இந்த ஜடை நீளமாக இருக்கவேண்டுமென ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு வேண்டுமானால் எக்ஸ்டன்ஷன் வைத்துக்கொள்ளலாம். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இப்படி மூன்று அல்லது நான்கு பின்னல் போட்டுக்கொள்ளலாம்.


இடைவெளி விட்ட இடத்தை கலர் டேப்பால் சுற்றி கட்டுதல்

பின்னல் போட்டு முழுவதும் முடிந்ததும், கலர் டேப்பை இடைவெளி விட்டு, போட்டிருக்கும் இரண்டு ரப்பர் பேண்டுகள் வெளியே தெரியாதவாறு சுற்றி ஹேர்பின் அல்லது யு பின்னால் பின் செய்துகொள்ள வேண்டும். டேப்பிற்கு பதிலாக கலர் நூல் அல்லது பூக்களைக்கொண்டும் மறைக்கலாம். இதனால் ரப்பர் பேண்டு வெளியே தெரியாது.

ஹேர்ஸ்டைல் முழுவதும் முடிந்தபிறகு சிறிய நெற்றிச்சுட்டி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும். ஒவ்வொரு ரப்பர் பேண்டுக்கு நடுவேயும் பின்னல் போடுவதற்கு பதிலாக அப்படியே பந்து போன்று வைத்தும் ஹேர் ஸ்டைல் செய்யலாம்.

Tags:    

மேலும் செய்திகள்