மருந்து, மாத்திரைகள் இல்லாமலே நாள்பட்ட நோய்களை குணமாக்க முடியும்! - அக்குபஞ்சரே ஒரே தீர்வு?

இந்திய மருத்துவத்தில் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் என்று எத்தனையோ மருத்துவ முறைகள் இருக்கிறது. இந்த அணைத்து மருத்துவ முறைகள் மூலமாகவும் மக்கள் பயன்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றனர்.;

Update:2025-03-11 00:00 IST
Click the Play button to listen to article

இந்திய மருத்துவத்தில் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் என்று எத்தனையோ மருத்துவ முறைகள் இருக்கின்றன. இந்த அனைத்து மருத்துவ முறைகள் மூலமாகவும் மக்கள் பயன்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும், இவை அனைத்தையும் தாண்டி மருந்து, மாத்திரைகள் இல்லாமலே ஒரு நோயை எளிதாக குணப்படுத்த முடியும் என்றால் அது அக்குபஞ்சர் மருத்துவத்தால் மட்டும்தான் முடியும். அப்படிப்பட்ட அந்த அக்குபஞ்சர் மருத்துவத்தில் உள்ள சிகிச்சை முறைகள் என்ன? அது எப்படி வேலை செய்கிறது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பேசுகிறார் அக்குபஞ்சர் மருத்துவத்தில் மிகச்சிறப்பாக செயலாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய மருத்துவர் திரு.லூதர் சேத்

அக்குபஞ்சர் மருத்துவம் இந்திய மருத்துவமுறையை சார்ந்ததா? அல்லது சீன மருத்துவ முறையை சார்ந்ததா?

அக்குபஞ்சர் மருத்துவ முறையானது சீனாவில் இருந்து வந்ததாகத்தான் மக்கள் மத்தியில் பரவலான தகவல் இருக்கிறது. உலகில் முதன்முதலில் மனிதன் தோன்றிய இடம் லெமூரியா கண்டம் என்று சொல்லப்படுகிறது. இது இந்தியப் பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் குறுங்கண்டம் என்றும் அதுதான் குமரிக்கண்டம் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இடத்தில் இருந்துதான் அக்குபஞ்சர் மருத்துவமுறை அங்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஒருகாலத்தில் அது இங்கு வளர்ச்சி பெறாமல் அங்கு போய் கூட வளர்ச்சி பெற்றிருக்கலாம். இப்போது மீண்டும் நமக்கு இந்த சிகிச்சை முறை கிடைத்திருக்கிறது. 1988-ல் இந்த சிகிச்சை முறையானது இந்தியாவுக்குள் நுழைந்தது. இப்போது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது இந்த சிகிச்சை முறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. மருந்து, மாத்திரைகள் ஒத்துக் கொள்ளாதவர்கள் இந்த சிகிச்சை முறையை எடுத்துக்கொண்டு பயன்பெறுகிறார்கள். அக்குபஞ்சர் மருத்துவர்கள் இன்னும் நன்கு படித்து அதிகமானால் இந்த சிகிச்சை முறை இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளன.


'கடலுக்குள் புதைந்த' லெமூரியா கண்டம் மற்றும் ஒற்றை தலைவலிக்கான அக்குபஞ்சர் மருத்துவம்

அக்குபஞ்சர் மருத்துவத்தில் எல்லாவிதமான வியாதிகளுக்கும் சிகிச்சை இருக்கிறதா? இல்லை குறிப்பிட்ட சில வியாதிகளுக்கு மட்டும்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறதா?

அக்குபஞ்சர் மருத்துவத்தில் வியாதிகளுக்கு பெயர் என்பதே கிடையாது. இப்போதுதான் கழுத்து வலி போன்ற ஒவ்வொரு வலிக்கும் நிறைய பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பேருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. எந்த இடத்தில் வலி இருக்கிறதோ அந்த இடத்தை எந்த ஆர்கன் செயல்படுத்துகிறதோ அந்த ஆர்கனை சரி செய்து விட்டால் வலியை முழுமையாக குணப்படுத்திவிட முடியும். உதாரணத்திற்கு கேன்சர் நோயை எடுத்துக்கொள்வோம். இன்று பரவலாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கிறது. இந்த வியாதியை மூன்றாவது, நான்காவது கட்டத்தில்தான் கண்டுபிடிக்க முடிகிறது.

எங்களை பொறுத்தவரை வியாதிகளை எக்ஸஸிவ் ஹீட், டெஃபிசியன்சி ஹீட் , எக்ஸஸிவ் கோல்டு, டெஃபிசியன்சி கோல்டு என நான்காக பிரிப்போம். நீங்கள் எந்த வியாதி சொன்னாலும் இந்த நான்குக்குள்தான் இருக்கும். கேன்சர், எய்ட்ஸ், டியூபர் குளோசிஸ் போன்ற வியாதிகள் எக்ஸஸிவ் கோல்டு என்ற பிரிவில் வரும். கோல்டு டிசீஸ்தான் இவங்க எல்லாரும் குணப்படுத்த முடியதா வியாதிகளா டிக்ளர் பண்றாங்க. எக்ஸஸிவ் கோல்டு இருக்கும் இடத்தில் வெப்பத்தை அதிகப்படுத்தும்போது அந்த வியாதியில் இருந்து குணமாகலாம். பெரிய வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் எங்களை மாதிரி மாற்று மருத்துவர்களை நாட மாட்டேன் என்கிறார்கள். மாற்று மருத்துவர்களுக்கும் அவர்கள் மீதே பெரிதாக நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை குணப்படுத்த முடியாமல் போய்விட்டாள் என்ன செய்வது என்ற தயக்கமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான சிம்டம்ஸ் ஆரம்பிக்கும் போதே வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டால் முழுமையாக குணப்படுத்திக் கொள்ள முடியும்.


கேன்சர் நோயை அக்குபஞ்சர் மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தலாம் - Dr.லூதர் சேத் 

மாற்று மருத்துவத்தின் மீது ஏன் மக்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை?

இந்த கேள்விக்கான காரணத்தை என்னிடம் வரும் பேஷண்ட் ஒருவரே சொல்லி இருக்கிறார். மாற்று மருத்துவர்களை நாடி செல்லும் பொழுது நிறைய தோல்விகளை சந்திக்கிறோம் என்று. இப்போது என்னை போன்ற ஒரு அக்குபஞ்சர் மருத்துவரிடம் வந்து நான் அளிக்கும் சிகிச்சை தோல்வியுற்றது என்றால் நான்தான் சரியாக படிக்கவில்லை என்று அர்த்தமே தவிர, மருத்துவம் இல்லை. நிறைய மருத்துவர்கள் இன்னும் இந்த அக்குபஞ்சர் மருத்துவத்தை சரியாக படிக்காமல் கூட இருக்கலாம். மற்ற மருத்துவர்கள் நன்கு படித்து பயிற்சி முடித்த பிறகுதான் மருத்துவம் பார்க்க வருவார்கள். ஆனால், அக்குபஞ்சர் மருத்துவத்தில் அதற்கான முறைகள் இன்னும் சரியாக வகுக்கப்படவில்லை. அவை மாறினால், இந்த மருத்துவத்தின் மீது உள்ள நம்பிக்கை இன்னும் கூடும். அப்போதுதான் இந்த மருத்துவத்தையும் முழுமையாக நம்பி மக்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வருவார்கள். இந்த துறையில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களை சரியாக கண்டறிந்து சிகிச்சை எடுத்தால் நிச்சயம் குணமடையலாம்.


முதுகுத்தண்டு பிரச்சினைகளுக்கு செய்யப்படும் அக்குபஞ்சர் மருத்துவம்

மருத்துவமனைகள் லாப நோக்கில் மட்டும்தான் செயல்படுகிறார்களா? இல்லை நோயை குணப்படுத்தவும் சிகிச்சை அளிக்கிறார்களா?

ஒரு மருத்துவமனையை நிர்வகிப்பவருக்குத்தான் உண்மைத்தன்மை என்ன என்பது தெரியும். எந்தவொரு தொழில் செய்தாலும், நிர்வாக செலவுகள் என்பது அந்த நிர்வாகத்தை வைத்து நடத்துபவருக்கு அதிகமாக இருக்கும். சென்னையில் ஒரு சின்ன கடை நடத்துபவரே ஒரு லட்சம் வரை செலவு செய்கிறார்கள். அப்போது மருத்துவமனைகள் என்று எடுத்துக்கொண்டால் அதிலும் கார்ப்பரேட் ஆன மருத்துவமனைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் நிர்வாக செலவுகள் என்பது அதிகமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் லட்சம் லட்சமாக செலவு செய்கிறார்கள் என்று கூட சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கிறது. இன்னொன்று இந்த மருத்துவத்தில் எந்தவொரு நோய்க்கும் தொடர் சிகிச்சை என்பது போன்ற ஒரு சிஸ்டமேட்டிக் முறையைத்தான் கையாளுகிறார்கள். இதனால் மக்களுக்கும் தொடர் பண விரயம்தான் ஆகிறது. குணமாக்க முடியாமலும் போகிறது. இதை தாண்டி இன்னும் எவ்வளவோ மருத்துவ முறைகள் இருக்கிறது. மக்கள் அதையும் நாடி செல்ல வேண்டும். அப்போதுதான் செலவை குறைப்பதுடன், நோயையும் குணப்படுத்த முடியும்.

குணப்படுத்தவே முடியாது என்பது மாதிரியான நோயுடன் வந்த யாரையாவது அக்குபஞ்சர் மருத்துவத்தில் குணப்படுத்தி இருக்கிறீர்களா? நீங்கள் சந்தித்த நெருடல்கள், செய்த சாதனைகள் என்று ஏதும் இருக்கிறதா?


வெரிகோஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளை 100 சதவிகிதம் குணப்படுத்த முடியும் - Dr.லூதர் சேத்

ஒரு விஷயத்தை மட்டும் பண்ண முடியாது என்றே சொல்லலாம். அதை கன்ஜெனிட்டல் பிரச்சினை என்று சொல்லுவோம். பிறவியிலேயே ஒரு பிரச்சினை இருந்தது என்றால் அதை மருத்துவத்தில் குணப்படுத்த முடியவில்லை என்று சொல்வதைவிட என்னால் முடியவில்லை. அதற்கான வழிமுறைகள் இல்லை. மற்ற நோய் எதுவாக இருந்தாலும் குணப்படுத்த முடியும். ஆனால், வியாதியின் தன்மை அதிகரித்து அறுவை சிகிச்சை, ஹெவி டோஸ் மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகு இந்த மருத்துவத்தில் நாட்டம் இல்லாமல் போய் விடுகிறது. அதனால் சிலர் அக்குபஞ்சர் சிகிச்சையை நோக்கி வருவதில்லை.

சவாலான விஷயம் என்று சொன்னால் இந்த சமூகத்தில் மிகவும் மோசமான மூன்று வியாதிகளுடன் மக்கள் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அது என்னவென்றால் முதுகுத்தண்டு பிரச்சினை, கழுத்து வலி மற்றும் படுத்த படுக்கையாக இருத்தல். இவர்களை போன்றோருக்கு சிகிச்சை அளித்து முழுமையாக 100 சதவிகிதம் நான் குணப்படுத்தி இருக்கிறேன். அவர்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதேபோன்று ஆஸ்துமா என்று சொல்லக்கூடிய மூச்சு பிரச்சினையால் வருபவர்களையும், வெரிகோஸ் பிரச்சினையால் வருபவர்களையும் முழுமையாக சரி செய்து இருக்கிறேன். மேலும் நாள்பட்ட ஒற்றை தலைவலி பிரச்சினையோடு வருபவர்களையும் குணப்படுத்தி இருக்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்