நண்பர்களை பிரிவீர்கள்
2025 மார்ச் 11-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கல்வி பரவாயில்லை. நிரந்தரமான சொத்துக்கள், பழைய பொருட்களை கொடுத்து புதிய பொருட்கள் வாங்குவதற்கான சூழல்கள் உள்ளன. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் யாருடைய பணமாவது உங்கள் கையில் இருக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு சுமாரான வருமானம் இருக்கிறது. அதே நேரம் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டு விட்டு நடக்கும். வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரை எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டு. காதல் விஷயங்கள், இனம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் உண்டு. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். நல்ல நண்பர்கள், மூத்த சகோதர - சகோதரிகள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு பரவாயில்லாமல் இருக்கும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பேச்சின் மூலமாக வருமானங்கள் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும், முழுமுதற் கடவுளாம் விநாயகர் மற்றும் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.