நண்பர்களால் ஏற்றம்
2025 ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பேச்சின் மூலமாக வருமானங்கள் உண்டு. எல்லாம் இருந்தாலும் உங்களுக்கு திருப்தியற்ற மனநிலை என்பது இருக்கும். அசையும், அசையா சொத்துக்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்ப, சூழ்நிலைகள் உருவாகும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, வருமானங்கள் இருக்கிறது. வேலை நன்றாக உள்ளது. ஆனாலும், திருப்தியற்ற மனநிலை என்பது இருக்கும். சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்களும் லாபம் அடைவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும் அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கும். எது எப்படி இருந்தாலும் உங்களின் அந்தஸ்து, புகழ் கூடும். நல்ல நண்பர்களால் உங்கள் வாழ்க்கையில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. உங்களின் விருப்பங்கள், ஆசைகள் பூர்த்தியாகும். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் கருடாழ்வாரை வழிபாடு செய்யுங்கள்.