பேச்சை குறையுங்கள்

Update:2025-04-15 00:00 IST

2025 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உங்களுக்கு இருக்கிறது. உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருக்கும். பேச்சை குறையுங்கள். ஒருபக்கம் பேச்சின் மூலமாக வருமானம் கிடைத்தாலும், இன்னொருபக்கம் அந்த பேச்சே தேவையற்ற எதிரிகளையும், மன வருத்தங்களையும், கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கும். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டால் தேர்வு செய்யப்படுவீர்கள். உங்களின் திட்டங்கள் வெற்றிபெறும். விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். வீடு, இடம், ஊர் மாற்றங்கள் உண்டு. புதிய சூழ்நிலைகளில் வாழ்க்கை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. தொழில் பரவாயில்லை. தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் இருக்கிறது. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். எது எப்படி இருந்தாலும் உங்களின் அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். பாஸ்போர்ட் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் நரசிம்மரை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்