யோசித்து செயல்படுங்கள்

Update:2025-02-11 00:00 IST

2025 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கல்வியில் கவனம் செலுத்துங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் மற்றும் லாபம் இருக்கிறது. இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் உள்ளன. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எதுவொன்றை செய்வதற்கு முன்பாகவும் யோசித்து செயல்படுங்கள். தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். தொழில், மணவாழ்க்கை இரண்டும் பரவாயில்லை. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. உங்கள் காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். உங்களின் கௌரவம், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு, கீர்த்தி பெரிய அளவில் பாராட்டப்பட கூடியதாக இருக்கும். நட்பு வட்டாரத்தை மெயின்டைன் செய்யுங்கள். இல்லையென்றால் பிரிந்து போக வாய்ப்புள்ளது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும், முருகன் மற்றும் நவகிரகத்தில் இருக்கக்கூடிய குருபகவானையும் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்