ஓடிடியில் வெளியாகும் 'ரத்தம்' திரைப்படம்! எப்போது தெரியுமா?

கடந்த மாதம் வெளியான விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது.

Update: 2023-11-02 05:52 GMT

கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது.

'தமிழ்படம்' மற்றும் 'தமிழ்படம் 2' போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் ரசிகர்களை அதிகம் கவர்ந்திழுத்தவை. இந்த திரைப்படங்களின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம்தான் ‘ரத்தம்’. இதில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திகா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சீரியஸான அரசியல் கதைக்களத்துடன் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் இப்படத்தை இன்ஃபினிடி ஃபிலிம் வென்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனன்ஜெயன், பிரதீப், பங்கஜ் போரா, விக்ரம் குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.


ஓடிடி ரீலீஸ் தேதி அறிவிப்பு:

இந்நிலையில் ‘ரத்தம்’ திரைப்படத்தின் ஓடிடி ரீலீஸ் தேதியை விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி 'ரத்தம்' திரைப்படம் நவம்பர் 3 ஆம் தேதி அமேசான் ஃபிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்