குட்டி சுட்டிகளின் ஃபேவரைட் டெஸர்ட் ‘கேக் பாப்ஸ்’ - சிம்பிள் ரெசிபி

குட்டீஸ்களை சமாதானப்படுத்தவும் அவர்கள் விரும்பி உண்ணக்கூடிய டெஸர்ட்களில் ஒன்றான கேக் பாப்ஸை குழந்தைகளுக்கு பிடித்தப்படி வித்தியாசமாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்றும் ரெசிபியை பகிர்ந்துள்ளார் சமையல் கலைஞர் சந்தியா.

Update:2024-01-02 00:00 IST
Click the Play button to listen to article

குட்டீஸ் என்றாலே பெரிதும் விரும்புவது லாலிபாப், குச்சி ஐஸ் போன்ற சப்பி உண்ணும் கேண்டிஸ் மற்றும் ஐஸ்கிரீம்களைத்தான். இதை வாங்குவதற்காக தினந்தோறும் குட்டீஸ்கள் அடம்பிடிப்பது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய போராட்டமாகவே இருக்கிறது. பெற்றோர்கள் குட்டீஸ்களின் பெரும் போராட்டத்திலிருந்து தப்பிக் கொள்ளவும், குட்டீஸ்களை சமாதானப்படுத்தவும் அவர்கள் விரும்பி உண்ணக்கூடிய டெஸர்ட்களில் ஒன்றான கேக் பாப்ஸை குழந்தைகளுக்கு பிடித்தப்படி வித்தியாசமாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்னும் ரெசிபியை பகிர்ந்துள்ளார் சமையல் கலைஞர் சந்தியா.


செய்முறை:

கேக் பாப்ஸ் செய்ய முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் வெண்ணிலா கேக்கை துண்டு துண்டுகளாக பிய்த்து போட வேண்டும். பின்னர் அவற்றுடன் சுண்டிய பால் சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து மெல்டட் சாக்லேட்டில் டிப் செய்து டாப்பிங்ஸ் தூவி கொள்ளலாம். இதை தவிர கேக் அச்சு இருப்பவர்கள் அதை பயன்படுத்தி புது புது வடிவங்களை உருவாக்கி கொள்ளலாம்.

கேக் அச்சு பயன்படுத்துபவர்கள் கேக் பாப்ஸை இரண்டு விதத்தில் செய்யலாம். முதல் விதமாக பிசைந்து வைத்திருக்கும் வெண்ணிலா கேக் மற்றும் பாலை அச்சில் பரப்பி ஐஸ்கிரீம் குச்சியை சொருகி 20 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்தெடுத்து கடைசியாக மெல்டட் சாக்லேட்டில் டிப் செய்வது.

மற்றொன்று, அச்சில் முதலில் மெல்டட் சாக்லேட்டை மட்டும் தடவி 10 நிமிடத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைத்தெடுத்து மெல்டட் சாக்லேட் செட்டானவுடன் அதன் மேல் பிசைந்த கேக்கை பரப்பி, அந்த கேக் மறையும் அளவிற்கு மற்றொரு கோட்டிங்காக மெல்டட் சாக்லேட்டை தடவி ஐஸ்கிரீம் குச்சியை சொருகி மீண்டும் 10 நிமிடத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைத்தெடுத்து டி-மோல்டு செய்து கொள்ள வேண்டும்.

இறுதியாக உருகிய சாக்லேட்டை பயன்படுத்தி கார்னிஷ் செய்து, பிடித்த ஸ்பிரிங்கல்ஸை டாப்பிங்ஸாக தூவி அழகுப்படுத்தி கொண்டால் டாப்பிங்ஸ் நிறைந்த கேக் பாப்ஸ் ரெடி!

Tags:    

மேலும் செய்திகள்