கசப்பு இல்லாமல் கிடாரங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

ஊறுகாய் என்று சொல்லும் போதே நம்மில் பலருக்கும் நாவில் எச்சில் ஊரும். ஊறுகாய் இருந்தால்தான் எனக்கு சோறே இறங்கும் என்று சொல்பவர்களும் இங்கு உண்டு.

Update:2025-01-28 00:00 IST
Click the Play button to listen to article

ஊறுகாய் என்று சொல்லும் போதே நம்மில் பலருக்கும் நாவில் எச்சில் ஊரும். ஊறுகாய் இருந்தால்தான் எனக்கு சோறே இறங்கும் என்று சொல்பவர்களும் இங்கு உண்டு. உப்பு, மிளகாய்த்தூள், கடுகு, வெந்தயம், எண்ணெய் ஆகிய பொருட்களை மட்டுமே கொண்டு மிகவும் காரசாரமாகவும், சுவை மாறாமலும் செய்யப்படும் ஊறுகாய்கள் பல உண்டு. அப்படி இன்று நமது சமையல் பகுதியில் நாம் பார்க்க இருப்பது "கிடாரங்காய் ஊறுகாய்". மாங்காய், எலுமிச்சை, பூண்டு இப்படி பல ஊறுகாய்களை பார்த்திருப்போம். அதென்ன கிடாரங்காய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எலுமிச்சை பழத்திலேயே பெரிய வகையை சேர்ந்ததுதான் இந்த கிடாரங்காய். கல்யாண விருந்துகளில் அதிகம் இடம்பெற கூடிய இந்த வகை ஊறுகாய் செய்வது எப்படி? இதில் உள்ள நன்மைகள் என்னென்ன? போன்றவற்றை விளக்கத்துடன் செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் திருமதி. சாரதா சந்திரசேகர்.


கிடாரங்காய் ஊறுகாய் செய்முறை

அடுப்பை பற்றவைத்து கடாய் சூடானதும் அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதன் பிறகு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கிடாரங்காயை நன்கு வதக்கிக்கொள்ளவும்.

உடனே ஊறுகாய் செய்து சாப்பிட விரும்புபவர்கள் வதக்கி செய்வதுதான் நல்லது. மேலும் வதக்கி செய்வதை நீண்டகாலம் பயன்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். வதக்காமல் செய்தால் அது ஊறி ரெடி ஆக ஒருவார காலம் ஆகிவிடும்.

வதக்கி எடுக்கப்பட்ட கிடாரங்காயை பொடி பொடியாக நறுக்கி உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கிளறி எடுத்துக்கொள்ளவும்.


கிடாரங்காயை கடாயில் அப்படியே வதக்குதல்

இதனை மொத்தமாக செய்யாமல் எப்போதெல்லாம் ஊறுகாய் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஒரு சட்டியில் ஒரு குழிக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, ஒரு மிளகாய் வத்தல் போட்டு வெடிக்கவிட்டு கிளறி வைக்கப்பட்டுள்ள கிடாரங்காயை தேவையான அளவு மட்டும் எடுத்து போட்டுக்கொள்ளவும்.

பிறகு, அதன் மீது ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் வறுத்து பொடித்து வைக்கப்பட்டுள்ள கடுகு, வெந்தயம் மற்றும் பெருங்காயம் தூளை போட்டு கிளறி இறக்கினால் கிடாரங்காய் ஊறுகாய் ரெடி.

கிடாரங்காயில் உள்ள நன்மைகள்

இந்த வகை காய்கள், கொழிஞ்சிக் காய், நார்த்தங்காய், கிடாரங்காய் என மூன்று வகைகளில் உண்டு.

இவை மூன்றுமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவை.

நமது உடம்பில் பித்தம் அதிகமாகி சாப்பிட பிடிக்காமல் இருக்கும்போது கிடாரங்காய், நார்த்தங்காய் ஆகியவற்றை சாப்பிட்டால் இந்த பிரச்சினை சரியாகும்.


கிடாரங்காய் ஊறுகாயில் இறுதியாக கடுகு, வெந்தயம் & பெருங்காயம் தூளை போடுதல்

பிரஷர், அதாவது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாய் சாப்பிட கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் கொழிஞ்சிக் காய், நார்த்தங்காய், கிடாரங்காய் ஆகியவற்றில் செய்யப்படும் ஊறுகாய்களை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் தாராளமாக சாப்பிடலாம்.

உடம்பில் உள்ள பித்தத்தை இது போக்க வல்லது.

உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

கருவுற்ற தாய்மார்கள் சாப்பிட்டாலும் உடம்புக்கு மிகவும் நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்