அடுப்பில்லாமல் எண்ணெயில்லாமல் பாயசமா! இது என்ன ரெசிபி?

பாயசத்தை தேங்காய் பால் எடுத்து செய்யாமல் நேரடியாகவே அரைத்து செய்வதால் அது உணவு குழாயில் இருக்கும் எண்ணெய் தன்மையை நீக்கும்.

Update:2024-01-09 00:00 IST
Click the Play button to listen to article

சமையல் என்றாலே முதலில் தேவைப்படுவது அடுப்புதான். ஆனால், அடுப்பில்லாமலும் ஜூஸ், சாண்ட்விச், சாலட்ஸ் போன்றவற்றை செய்யலாம் என்பதை நாம் அறிந்திருப்போம். அதை செய்தும் சாப்பிட்டிருப்போம். இதை தாண்டி கமகமவென நெய் மணம் வீச முந்திரி, திராட்சை போன்றவற்றை சேர்த்து விசேஷ நாள் என்றாலே பாயாசம் செய்து அசத்துவது வழக்கம். ஆனால், அடுப்பில்லாமல், எண்ணெய், நெய் என எதுவும் இல்லாமல் வெறும் 5 நிமிடத்தில் மிக சிம்பிளான முறையில் பாதாம் பிசின் பாயாசம் செய்வதெப்படி என்னும் வித்தியாசமான ரெசிபியை நம்முடன் பகிர்ந்துள்ளார் சமையல் கலைஞர் கண்ணம்மா நீலகண்டன்.


செய்முறை

அடுப்பில்லாமல் பாயாசம் செய்ய முதலில் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு அவற்றுடன் 2 சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து தேங்காய் துருவல் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் துருவல் மிக்ஸியில் நன்கு பேஸ்ட்டான பின்னர் அவற்றுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து ஜூஸ் பதத்திற்கு மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்தெடுத்த அந்த தேங்காயை ஒரு கிண்ணத்தில் மாற்றி, முதல் நாள் இரவு ஊற வைத்த பாதாம் பிசினை 1 கப் அளவு தேங்காய்க்கு 3 ஸ்பூன் என்ற கணக்கில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் வெள்ளரி விதை, பூசணி விதை, வெள்ளை எள், காய்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும். அடுப்பில்லாமல் தயாரான பாயாசத்தை ஒரு கப்பில் ஊற்றி அதன்மேல் மாதுளை பழம் அல்லது பிடித்த ட்ரை ஃப்ரூட்ஸ் அல்லது பிடித்த ட்ரை நட்ஸை சேர்த்து கொள்ளலாம். வெறும் 5 நிமிடத்தில் அடுப்பில்லா, எண்ணெய் இல்லா பாதாம் பிசின் பாயாசம் ரெடி!

பாதாம் பிசின் பயன்கள்:

  • உடலுக்கு குளிர்ச்சியை தரும்
  • ஆண், பெண் என இருபாலரின் கருவுறுதல் பிரச்சினையை சரிசெய்ய உதவும்
  • உலர் சருமத்தை நீக்கி சருமத்திற்கு எண்ணெய் தன்மையை கொடுக்கும்
  • முடி உதிர்வு, எடை குறைப்பு என பல விஷயங்களுக்கு பாதாம் பிசின் உதவுகிறது
  • குறிப்பாக இந்த பாயசத்தை தேங்காய் பால் எடுத்து செய்யாமல் நேரடியாகவே அரைத்து செய்வதால் அது உணவு குழாயில் இருக்கும் எண்ணெய் தன்மையை நீக்கும்.
Tags:    

மேலும் செய்திகள்