ஈஸி பட் டேஸ்ட்டி! கத்தரிக்காய் வாழைப்பூ ஸ்டஃப் செய்யலாம் வாங்க!

வாழைப்பூவில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. கூடவே கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், காப்பர், ஜிங்க், வைட்டமின் ஏ, பி1 மற்றும் சி போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன.

Update: 2024-04-15 18:30 GMT
Click the Play button to listen to article

‘சைவ மீன்’ என்று சொல்லும் அளவிற்கு சுவையும் சத்துக்களும் நிறைந்தது கத்தரிக்காய். எந்த காய் பிடிக்காவிட்டாலும் நிறையப்பேருக்கு கத்தரிக்காய் ஃபேவரிட்தான். கத்தரிக்காயில் சாம்பார், பொரியல், அவியல் என என்ன செய்தாலும் சூப்பராக இருக்கும். ஆனால் வாழைப்பூவில் எண்ணற்ற சத்துக்கள் இருந்தாலும் நிறையப்பேர் அதை விரும்பி சாப்பிடமாட்டார்கள். வாழைப்பூவை பெரும்பாலும் கூட்டு அல்லது பொரியலாக செய்யும்போது குழந்தைகள் சாப்பிடுவதற்கே அடம்பிடிப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் சுலபமாகவும், அதே சமயம் சுவையாகவும் இருக்கும் கத்தரிக்காய் வாழைப்பூ ஸ்டஃப் செய்துகொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் என்கிறார் சமையல் கலைஞர் கவிதா.


செய்முறை

கத்தரிக்காயை நீளவாக்கில் இரண்டாக வெட்டிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி, அதில் வெட்டி வைத்திருக்கும் கத்தரிக்காயை போட்டு வேகவிடவும்.

காய் வெந்துகொண்டிருக்கும் சமயத்தில், மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் சேர்த்து பொரியவிடவும். அதில் வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

அதில் பொடிப்பொடியாக வெட்டி வைத்திருக்கும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். அதனுடன் பூண்டையும் சேர்த்து வதக்கி, அதில் வாழைப்பூவையும் சேர்த்து நன்கு வதக்கவும். வாழைப்பூ வதங்கும்போது சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுப்பை சிம்மில் வைத்து வதங்கிக்கொண்டிருக்கும் வாழைப்பூவில் அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி கிளறி மூடிபோட்டு வேகவிடவும்.

மற்றொரு அடுப்பில் வைத்திருக்கும் கத்தரிக்காய் தற்போது நன்கு வெந்திருக்கும். அதனை வடிகட்டி எடுத்து ஆறவைக்கவும்.

வெந்துகொண்டிருக்கும் வாழைப்பூவில், சிறிதளவு ஊறவைத்து, வேகவைத்திருக்கும் கடலைப்பருப்பை சேர்த்து கிளறவும். கடைசியாக பெருங்காயத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.

வேக வைத்திருக்கும் கத்தரிக்காயின் சூடு ஆறியதும், நடுவிலிருக்கும் சதைப்பகுதியை ஸ்பூன் பயன்படுத்தி எடுத்துவிடவும்.

அதில், வாழைப்பூ - கடலைப்பருப்பை ஸ்டஃப் செய்யவும். கொஞ்சம் கடலை மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து, ஸ்டஃப் வெளியே வராதபடி கத்தரிக்காய் மீது ஊற்றவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கத்தரிக்காய் ஸ்ட்ஃபை கடலைமாவு ஊற்றியிருக்கும் பக்கம் அடியில் இருக்குமாறு மெதுவாக வைக்கவும். ஏற்கனவே கத்தரிக்காயும், ஸ்டஃபும் வெந்திருப்பதால் அதிக நேரம் தோசைக்கல்லில் வைக்க தேவையில்லை.

கடலைமாவு ஸ்டஃபுடன் சேர்ந்து வெந்ததும் தோசைக்கல்லிலிருந்து எடுத்து தட்டில்வைத்து அதன்மீது பொடிப்பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவவும். சூடான சுவையான கத்தரிக்காய் - வாழைப்பூ ஸ்டஃப் ரெடி!

கத்தரிக்காயின் நன்மைகள்

  • கத்தரிக்காய் சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. அதேபோல் இரும்புச்சத்தும் நிறைந்தது.
  • தக்காளியைப் போலவே புரதம் மற்றும் குறைந்த கலோரி கொண்டவை இவை. வைட்டமின் பி கத்தரிக்காயில் அதிகம் இருக்கிறது. இது இதயநோய்களை தடுக்கிறது.
  • அரிப்பு மற்றும் புண் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.

வாழைப்பூவின் நன்மைகள்

  • வாழைப்பூவில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. கூடவே கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், காப்பர், ஜிங்க், வைட்டமின் ஏ, பி1 மற்றும் சி போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன.
  • பெண்களின் மாதவிடாய் மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சினைகளை சரிசெய்வதில் வாழைப்பூவின் பங்கு அளப்பரியது.
  • வயிற்று வலி மற்றும் வயிற்றுப்புண்ணை ஆற்றுகிறது. ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளவர்கள் வாழைப்பூவை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நீரிழிவு பிரச்சினைகளுக்கு அருமருந்து.
Tags:    

மேலும் செய்திகள்