ஷெட்டியா? தேவரகொண்டாவா? - யாருடன் ஜோடி சேருவார் ராஷ்மிகா?

‘இன்கேம் இன்கேம்’ பாடலில் விஜய் தேவரகொண்டாவுடனான இவரது கெமிஸ்ட்ரி தமிழ், தெலுங்கு, இந்தி என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன்பிறகு தமிழ், இந்தி என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார் ராஷ்மிகா.

Update:2023-10-03 00:00 IST
Click the Play button to listen to article

தனது பெரிய கண்கள் மற்றும் அழகிய சிரிப்பால் பலரின் மனதையும் கொள்ளையடித்தவர் ராஷ்மிகா மந்தனா. கடந்த சில வருடங்களாக‘நேஷனல் க்ரஷ்’ என்ற இடத்தை தக்கவைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். அறிமுகம் என்னவோ கன்னட படம்தான் என்றாலும் இவரை பிரபலமாக்கியது தெலுங்கு படங்கள்தான். ‘இன்கேம் இன்கேம்’ பாடலில் விஜய் தேவரகொண்டாவுடனான இவரது கெமிஸ்ட்ரி தமிழ், தெலுங்கு, இந்தி என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன்பிறகு தமிழ், இந்தி என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார் ராஷ்மிகா.

இதனிடையே கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டிக்கும், ராஷ்மிகாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் ராஷ்மிகா அதை கேன்சல் செய்தார். தற்போது இந்தியில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா இணைந்து நடித்திருக்கும் ‘அனிமல்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது. இந்நிலையில், தனது முன்னாள் காதலியுடன் தான் தொடர்பில் இருப்பதாக ரக்‌ஷித் ஷெட்டி கூறியிருப்பது திரையுலகில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.


அறிமுகப் படம் மற்றும் ‘கீதா கோவிந்தம்' படத்தில் ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனாவின் திரை அறிமுகம்

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா, ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின்மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். அந்த படம் கன்னடத்தில் வசூல் சாதனை புரிந்ததோடு மட்டுமில்லாமல் SIIMA-வின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றுத்தந்தது. தொடர்ந்து இரண்டு கன்னட படங்களில் நடித்த ராஷ்மிகா, பிறகு தெலுங்கில் ‘சலோ’ என்ற படத்தில் அறிமுகமானார். இருப்பினும் விஜய் தேவாரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம்தான் ராஷ்மிகாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தெலுங்கு, கன்னடம் என மாறிமாறி நடித்துவந்த ராஷ்மிகா, ‘சுல்தான்’ திரைப்படம் மூலம் தமிழிலும் கால்பதித்தார். குறிப்பாக, ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் தெலுங்கையும் தாண்டி இந்திய அளவில், குறிப்பாக தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. சோஷியல் மீடியாவில் பலரும் அந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்து ஹைப் கொடுத்தனர். தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என மாறி மாறி அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துவருகிறார் ராஷ்மிகா.


முன்னாள் காதலன் ரக்‌ஷித் ஷெட்டியுடன்

முறிந்த முதல் காதல்!

பல மொழிப்படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், 2016ஆம் ஆண்டு தனது முதல் படத்தில் தன்னுடன் நடித்த ரக்‌ஷித் செட்டியுடன் காதலில் விழுந்தார் ராஷ்மிகா. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் 2017ஆம் ஆண்டு வெகு விமரிசையாக நடந்தது. ஆனால் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து ஹிட்டான ராஷ்மிகாவுக்கும், ரக்‌ஷித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2018ஆம் ஆண்டு இருவரும் தங்களது திருமணத்தை கேன்சல் செய்தனர்.

விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம்?

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் விஜய் தேவரகொண்டா. ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்களால் தெலுக்கு திரையுலகின் ஹிட்டான ஜோடியாக வலம்வந்த ராஷ்மிகாவுக்கும், தேவரகொண்டாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததால்தான் ரக்‌ஷித்துடனான தனது பந்தத்தை ராஷ்மிகா முறித்துக்கொண்டதாக பேசப்பட்டன. ஆனால் இருவருக்குமிடையே நல்ல நட்பு இருப்பதாகக் கூறிவந்தார் ராஷ்மிகா. இருப்பினும் இருவரும் ஒன்றாக சுற்றிவருவதை வைத்து இருவருக்குமிடையே ரகசிய காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.


விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா

குறிப்பாக, இருவரும் சேர்ந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுவந்ததாக புகைப்படங்கள் வெளியான நிலையில், அதுகுறித்து இருவரும் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு இருவரும் பகிர்ந்த புகைப்படங்கள் ஒரே மாடியில் எடுத்ததாகவும், அது தேவரகொண்டாவின் வீடு எனவும், இருவரும் ஒன்றாகத்தான் வசித்துவருவதாகவும் தகவல்கள் பரவின.

இதனிடையே நடிகை சமந்தாவுடன் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்த ‘குஷி’ பட பிரமோஷன் பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா, விஜய் தேவரகொண்டா ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், மூன்று மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் கூறினார். அதற்குள், தனது கையுடன் மற்றொரு கை இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த தேவரகொண்டா, “நிறைய நடக்கிறது, ஆனால் இது உண்மையிலேயே ஸ்பெஷலானது. விரைவில் அறிவிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அது ராஷ்மிகாவுடைய கை தான் என்றும், இருவருக்கும்தான் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்றும் நெட்டின்சகள் பரப்பிவருகின்றனர்.


ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் ராஷ்மிகா

மீண்டும் முன்னாள் காதலன்?

இந்நிலையில் ராஷ்மிகாவின் முன்னாள் காதலனான ரக்‌ஷித் ஷெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் இன்னும் ராஷ்மிகாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருந்தார். அதில், “நாங்கள் அடிக்கடி பேசாவிட்டாலும் எப்போதாவது மெசேஜ் அனுப்பிக்கொள்வோம். எப்போதெல்லாம் என்னுடைய படம் ரிலீஸ் ஆகிறதோ அப்போதெல்லாம் ராஷ்மிகா வாழ்த்து தெரிவிப்பார். நானும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பேன். அதேபோல இருவரும் பிறந்த நாளுக்கு மாறிமாறி வாழ்த்து தெரிவித்துக்கொள்வோம். ராஷ்மிகாவுக்கு எப்போதும் பெரிய கனவுகள் இருக்கிறது. அந்த கனவுகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். அவர் தனது கனவுகளை சாதிக்க அவரை தட்டிக்கொடுக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். ஒருபுறம் விஜய் தேவரகொண்டாவுடனான காதல் குறித்த கிசுகிசுக்கள் பரவிவந்தாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரக்‌ஷித் ஷெட்டி பேசியிருப்பது திரையுலகில் வைரலாகி வருகிறது.


கௌதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா

மீண்டும் தேவரகொண்டாவுடன் ஜோடி

தளபதி விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் ஜோடிசேர்ந்த ராஷ்மிகாவுக்கு தற்போது பல மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இந்தியில் ரன்பீர் கபூருடன் இவர் நடித்திருக்கும் ‘அனிமல்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதையடுத்து தமிழில் ‘ரெயின்போ’, தெலுங்கில் ‘புஷ்பா 2’ ஆகிய படக்களில் பிஸியாக உள்ளார் ராஷ்மிகா. இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்கும் படத்திற்கு முதலில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடிப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் ஸ்ரீ லீலா விலகிக்கொள்ளவே, அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் ராஷ்மிகா ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

விரைவில் திருமணம் அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. மூன்றாவது முறை திரையில் ஜோடி சேரும் இவர்கள் விரைவில் நிஜத்திலும் ஜோடி சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்