உணர்ச்சிகரமான காதல் கதையுடன் உருவாகிறது ஹாய் நான்னா!

தனியாக தனது மகளோடு வசிக்கும் நானிக்கு மிருணால் தாகூருடன் ஏற்படும் உணர்ச்சிகரமான காதலை மையமாக வைத்து இந்த படம் சுழல்வதாகக் கூறப்பட்டுள்ளது.

Update:2023-10-14 15:29 IST

தெலுங்கு நடிகர் நேச்சுரல் ஸ்டார் நானியின் 30 - வது உணர்ச்சிகரமான காதல் படத்திற்கு 'ஹாய் நான்னா'என்று பெயரிடப்பட்டுள்ளது.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நானி. இவர் எப்போதுமே வழக்கமான தெலுங்கு மசாலா பாணியை தவிர்த்து நல்ல திரைக்கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். அந்த வகையில் நானி நடிப்பில் உருவான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ போன்ற  படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. அதில் குறிப்பாக அவர் நடித்துள்ள ‘ஜெர்ஸி’ என்ற திரைப்படம் மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நானி நடிக்கும் 30வது படமான ‘ஹாய் நான்னா’ குறித்த அறிவிப்பு படக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. நானியின் மகளாக நடித்திருக்கும் கியாரா கண்ணாவின் கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் மிக முக்கியமாக அனைவராலும் பேசப்படும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. தனியாக தனது மகளோடு வசிக்கும் நானிக்கு மிருணால் தாகூருடன் ஏற்படும் உணர்ச்சிகரமான காதலை மையமாக வைத்து இந்த படம் சுழல்வதாகக் கூறப்பட்டுள்ளது.


மேலும் இப்படத்தை ஷவுர்யுவ் இயக்குகிறார். மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. நடிகர் கமல்ஹாசனின் மகளான சுருதி ஹாசன் இந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாகேந்திர காசி மற்றும் ஷவுர்யுவ் திரைக்கதையை எழுதியுள்ளனர். ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இதற்கு சானு ஜான் வர்கீஸ் ஐஎஸ்சி ஒளிப்பதிவு செய்துள்ளார், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டாகும் என தெலுங்கு திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்