90’s கிட்ஸ்களுக்கு பிடித்த "பொரி அரிசி உருண்டை" செய்யலாம் வாங்க!

நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பும் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த பாரம்பரிய பலகாரங்கள் செய்வது பெரும்பாலும் தற்போது குறைந்து விட்டது.

Update:2024-07-21 14:00 IST
Click the Play button to listen to article

நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பும் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த பாரம்பரிய பலகாரங்கள் செய்வது பெரும்பாலும் தற்போது குறைந்து விட்டது. இன்றைய காலகட்டத்தில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகமாகிவிட்டது. அதேநேரம் மாலை நேரத்தில் பீட்சா, பர்கர், பிஸ்கட், பொரித்தது உள்ளிட்ட துரித உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. இதற்கு மாறாக பாரம்பரியமான முறையில் அதிரசம், முறுக்கு, ரவா லட்டு, பாசிப்பயறு உருண்டை என செய்து சாப்பிடலாம். உடலுக்கு ஊட்டம் தரும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையாக சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த "பொரி அரிசி உருண்டை" எப்படி செய்யலாம் என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் கவிதா.


செய்முறை :

* கடாயில் ஒரு ஆழாக்கு அரிசி மாவை எடுத்து லேசாக வறுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* அடுத்ததாக ஒரு பெரிய பாத்திரத்தில், 4 ஆழாக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அதில் 3/4 ஆழாக்கு பொடித்த வெல்லத்தை சேர்க்க வேண்டும்.

* தண்ணீரில் வெல்லம் நன்கு கரைய வேண்டும். அதனுடன் ஏலக்காய் பொடியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* வெல்லத்தில் தூசி, மண் நிறைய இருக்க வாய்ப்புள்ளது. எனவே மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் காய்ச்சிய நீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* மீண்டும் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, வடித்து வைத்த வெல்லக் காய்ச்சலை அதில் ஊற்றி, அத்துடன் வறுத்து எடுத்து வைத்துள்ள அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி விட வேண்டும்.


வெல்லம் காய்ச்சிய நீரில் அரிசி மாவு போட்டு கிளறிவிடும் முறை

* தண்ணீரில் கொதித்து மாவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

* பிறகு மாவு சூடு ஆறியதும், அளவாக எடுத்து உருண்டைகளாக உருட்டி எடுத்து, துருவி வைத்துள்ள தேங்காயை மேலே ஒரு கோட் கொடுத்தால் சுவையான பொரி அரிசி உருண்டை ரெடி!


ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த பொறி அரிசி உருண்டைகள் 

 வெல்லத்தில் உள்ள நன்மைகள் :

* வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. செரிமான திரவத்தை தூண்டி விட்டு ஜீரணத்தை சரி செய்கிற பண்பு வெல்லத்திற்கு உண்டு..

* மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு படபடப்பு, தலைசுற்றல், சோர்வு அதிகமாக இருக்கும் நிலையில், வெல்லத்தை சிறிதளவு உட்கொண்டால் சரியாகும்.

* ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரம் என்று கூட சொல்லலாம்.

* குழந்தை முதல் பெரியவர்கள்வரை ஏற்படும் குடல் புழுக்கள் பிரச்சினையை சரி செய்ய அதிகாலையில் வெல்லத்தை சிறு துண்டு சாப்பிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்