இத்தாலியை மட்டுமல்ல இந்தியாவையும் கலக்கும் டேஸ்ட்டி டிராமிசு! ஈஸியா செய்யலாம் வாங்க!

டிராமிசு ஒரு வகையான டெஸெர்ட். இத்தாலிய டெஸெர்ட் வகைகளில் சிறப்பானவற்றில் இதுவும் ஒன்று.

Update:2024-04-30 00:00 IST
Click the Play button to listen to article

டிராமிசு ஒரு வகையான டெஸெர்ட். இத்தாலிய டெஸெர்ட் வகைகளில் சிறப்பானவற்றில் இதுவும் ஒன்று. டிராமிசு முதன் முதலில் வெனிட்டோ மற்றும் ஃப்ரியூலி-வெனிசியா கியுலியா என்ற இடத்தில் 1960ம் ஆண்டு தோன்றியதாக சொல்லப்படுகிறது. இந்த டெஸெர்ட், காபி, விஸ்கி, சாக்லேட் மற்றும் மஸ்கார்போன் கொண்ட மதுபானத்தில் ஊறவைக்கப்பட்ட கடல்பாசி கேக் அடுக்குகளைக் கொண்டது. நாளடைவில் இதன் செய்முறையில் தேவைக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகளிலும், உணவு சாப்பிட்ட பிறகு ஏதாவது ஒரு இனிப்பை சாப்பிடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இப்பழக்கம் தற்போது எல்லா இடங்களிலும் வழக்கமாகிவிட்டது. இந்த இத்தாலிய ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என சொல்லித்தந்து விளக்குகிறார் சமையல் கலைஞர் பியூஷ் ஆர்யா.


செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி காபி தூள் சேர்த்து அதனுடன் சிறிது நீர் ஊற்ற வேண்டும். பின்னர் 1 தேக்கரண்டி விஸ்கியை சேர்க்க வேண்டும். தேவைக்கு ஏற்ப வெள்ளை சர்க்கரை 1 முதல் 2 தேக்கரண்டி அளவுக்கு சேர்த்து நன்கு கலந்து ஓவனில் 5 முதல் 10 நொடிகளுக்கு சூடாக்க வேண்டும்.

* அடுத்ததாக ஒயிட் கிரீம் மற்றும் தயிர் (Hung Curd) இரண்டையும் ஒன்றாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் 2 முதல் 5 நிமிடங்களுக்கு அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* பிறகு ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள காபி டிகாக்ஷனில், பிஸ்கட்களை ஊற வைத்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

* அதன் மேலே ஒயிட் கிரீம் மற்றும் தயிர் (Hung Curd) கலவையை பரப்ப வேண்டும். மீண்டும் பிஸ்கட் துண்டுகளை காபி டிகாக்ஷனில் டிப் செய்து அடுத்த லேயராக வைக்க வேண்டும்.

* மீண்டும் ஒயிட் கிரீம் கலவையை பரப்ப வேண்டும். இறுதியாக காபி தூளை மழைச்சாரல்போல் தூவி 8 மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் டிராமிசு ரெடி!

தயிர் (Hung Curd) செய்முறையும், பயன்பாடும்:

* தயிர் (Hung Curd) இந்தியாவில் தயாரிக்கும் தயிரை குறிப்பிடுவதாகும். தண்ணீர் இன்றி வடிகட்டப்பட்ட தயிர் என்றும் இதை சொல்லலாம்.

* ஒரு மஸ்லின் துணியில் தயிரை தொங்க விடுவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் அனைத்தும் சிறிது நேரத்தில் வடிகட்டப்படுகிறது.

* ரைத்தா, துரித உணவுகள், கபாப் போன்றவற்றை செய்ய இந்தவகை தயிர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்