செம டேஸ்டியான உருளைக்கிழங்கு குடைமிளகாய் கிரேவி - வித்தியாசமான ரெசிபி!

Update: 2024-09-02 18:30 GMT
Click the Play button to listen to article

அம்மாக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று குழந்தைகளுக்கு ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த உணவுகளை தினமும் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதில் குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்க நடக்கும் போராட்டம் பெரிது. டீப் ஃப்ரை உணவுகள் சாப்பிடும் அளவிற்கு மற்ற உணவுகளின் மீது அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. உருளைக்கிழங்கை எப்படி கொடுத்தாலும் சிலருக்கு பிடிக்கும்; ஆனால் சிலருக்கு வறுத்து, பொரித்து கொடுத்தால்தான் சாப்பிடுவாங்க. அப்படி இருக்கும்பட்சத்தில் சுவையான ஆலு கேப்சிகம் கிரேவியை, இப்படி ஒரு முறை செய்துபாருங்க என சொல்லிக்கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் சுந்தரி ராகவேந்திரன்.


செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 200 கிராம் தயிர் சேர்க்க வேண்டும். கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்து எடுத்த தயிரில் மல்லி தூள் 1 தேக்கரண்டி, சீரகத் தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, உப்பு சிறிதளவு, மிளகாய் தூள் 2 தேக்கரண்டி மற்றும் கரம் மசாலா 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து எடுத்து ஊற வைக்க வேண்டும்.


தயிரில் கிரேவிக்கு தேவையான மசாலாக்களை சேர்த்து கலக்குதல் 

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, கடாய் சூடானதும் 4 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம் சிறிதளவு சேர்த்து பொரிந்ததும் அதனுடன், இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளலாம். காரம் அதிகமாக சாப்பிட விருப்பம் இருப்பவர்கள் பச்சை மிளகாயை இதனுடன் அரைத்து சேர்த்து கொள்ளலாம்.

பொடியாக நறுக்கிய 4 வெங்காயத்தையும் கடாயில் போட்டு நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும். பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி குழைய வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவேண்டும்.

இந்தநிலையில் தயாரித்து வைத்துள்ள தயிர் கலவையை இதனுடன் சேர்த்து பச்சை வாசனை போக 2 கொதி விடவேண்டும்.


பட்டரில் வெங்காயம், கேப்சிகம், உருளைக்கிழங்கை 3 முதல் 5 நிமிடங்கள் வதக்க வேண்டும். 

அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், 1 1/2 தேக்கரண்டி பட்டர் போட்டு, ஸ்லைஸ் செய்துவைத்துள்ள வெங்காயம் மற்றும் கேப்சிகமை க்ரஞ்சியாக இருப்பதுபோல வதக்கிக் கொள்ளவேண்டும்.


ஆலு கேப்சிகம் கிரேவி

ஏற்கனவே வேக வைத்து தோல் நீக்கி நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கையும், இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். 2 முதல் 3 நிமிடங்களுக்கு வதக்கிய பிறகு, அதனை கிரேவியுடன் கலந்து, உப்பு சரி பார்த்து, கஸ்தூரி மேத்தி போட்டு, சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான ஆலு கேப்சிகம் கிரேவி ரெடி!

Tags:    

மேலும் செய்திகள்