ஒரு கடி இனிப்பு! ஒரு கடி காரம்! - சூப்பரான தோசைகளை சுலபமா செய்யலாம்!

தோசை முழுவதும் மசாலா நன்கு இறங்கிய பின் அந்த கலவையை அப்படியே தோசை முழுவதும் சமமாக பரப்பிவிட்டு அதன்மீது துருவிய சீஸை தாராளமாக சேர்த்து துண்டுகளாக்கி சுருட்டி எடுக்கவும்.

Update: 2024-02-05 18:30 GMT
Click the Play button to listen to article

இட்லி, தோசையை விரும்பாத தென்னிந்தியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். நமது ஊரின் பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை போன்றவற்றை முன்பெல்லாம் ஏதாவது பண்டிகை வந்தால்தான் வீட்டில் செய்வார்கள். ஆனால் இப்போது அது தினசரி உணவுகளில் ஒன்றாகிவிட்டது. அதிலும் வித்தியாச வித்தியாசமான சுவைகளில் விதவிதமான ரகங்களில் தோசைகளை விற்பதை பல இடங்களில் பார்க்கமுடிகிறது. இதற்கென்றே பிரத்யேக கடைகளும் இயங்கிவருகின்றன. சூப்பரான சுவையில் அசத்தலான சாக்கோ நட்ஸ் தோசை மற்றும் காரசாரமான மசாலா சீஸ் கார்ன் தோசைகளை வீட்டிலேயே எப்படி செய்வது? பார்க்கலாம்.


செய்முறை

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை ஊற்றி மெல்லியதாக பரப்பவும். அதன்மீது தோசைக்கரண்டியால் வெண்ணெய் தடவவும்.

சாக்லேட் சிரப்பை ஊற்றி மேஷரால் தோசைமீது பரப்பிவிடவும். பின்னர் சாக்கோ சிப்ஸை தூவி வேகவிடவும். தோசை வெந்தபின்னர் உடைத்த முந்திரி, நறுக்கிய பாதாம் மற்றும் உலர் திராட்சையை தூவிவிட்டு தோசையை உடையாமல் எடுக்கவும்.

கடைசியாக அதன்மீது கெராமல் சாஸை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.


செய்முறை

தோசைக்கல் சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றி மெல்லியதாக பரப்பவும்.

அதன்மீது பொடியாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், தக்காளி, சீஸ் துருவல், வேகவைத்த கார்ன், வெண்ணெய், சாஸ், உருளைக்கிழங்கு மசாலா, அரைத்த மிளகாய் விழுது, கார சட்னி மற்றும் சிறிது நெய் ஊற்றி மேஷரால் நன்கு மசிக்கவும்.

தோசை முழுவதும் மசாலா நன்கு இறங்கிய பின் அந்த கலவையை அப்படியே தோசை முழுவதும் சமமாக பரப்பிவிட்டு அதன்மீது துருவிய சீஸை தாராளமாக சேர்த்து துண்டுகளாக்கி சுருட்டி எடுக்கவும்.

சூடான தோசையின்மேல் துருவிய சீஸை மீண்டும் மழைச்சாரல் போல தூவி எடுத்து சாப்பிட்டால் சுவையான மசாலா சீஸ் கார்ன் தோசை ரெடி.

Tags:    

மேலும் செய்திகள்