ஸ்பான்ஜி ஸ்மூத்தி கோதுமை - கேரட் கேக்!

மைதாவை பயன்படுத்தாமல் கோதுமை மாவை பயன்படுத்தி கோதுமை - கேரட் கேக் தயாரிப்பது எப்படி என்னும் வித்தியாசமான ரெசிபியை எளிதான முறையில் விளக்கியுள்ளார் சமையல் கலை நிபுணர் வித்யா ராஜு.

Update:2023-11-14 00:00 IST
Click the Play button to listen to article

பொதுவாகவே நாம் அனைவரும் கேரட்டில் பொரியல், அல்வா, ஜூஸ் என்றுதான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், கேரட்டை வைத்து கேக் செய்யலாம் என்று எத்தனைப் பேருக்கு தெரியும்? பெரும்பாலும் கேக் செய்ய முதன்மைப் பொருளாக பயன்படுத்தப்படும் மைதாவை பயன்படுத்தாமல் கோதுமை மாவை பயன்படுத்தி கோதுமை - கேரட் கேக் தயாரிப்பது எப்படி என்னும் வித்தியாசமான ரெசிபியை எளிதான முறையில் விளக்கியுள்ளார் சமையல் கலை நிபுணர் வித்யா ராஜு.


செய்முறை:

  • முதலில் கேக் டின்னில் பட்டர் ஷீட் போட்டு அதற்கு மேல் எண்ணெய் தடவ வேண்டும். மைக்ரோவேவ் OTG ஓவன் பயன்படுத்துபவர்கள் ஓவனை 10 நிமிடத்திற்கு 180℃ க்கு ப்ரீ ஹீட் செய்யவேண்டும். மைக்ரோவேவ் கன்வெக்‌ஷன் ஓவனை பயன்படுத்துபவர்கள் 175℃-இல் 10 நிமிடத்திற்கு ப்ரீ ஹீட் செய்யவேண்டும்.
  • அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் நாட்டு சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக பீட் செய்யவேண்டும். இதை தனியாக வைத்துவிட்டு இன்னொரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு அவற்றுடன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்றையும் ஒரு சேர கிளற வேண்டும். அடுத்த கட்டமாக பீட் செய்துவைத்த பாலில் தயிர் சேர்த்து கொஞ்சம் பீட் செய்து விட்டு அதில் எண்ணெயை ஊற்றி மீண்டும் நன்றாக பீட் செய்யவேண்டும்.
  • அதற்கடுத்து துருவிய கேரட்டை சேர்த்து கலக்கி, அதனுடன் லவங்கப்பட்டைத் தூளை சேர்த்து கலக்கவேண்டும். இவற்றை நன்றாக கலக்கிய பின்னர் தனியாக கலக்கி வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக கேரட் கலவையில் சேர்த்து மிகவும் மெதுவாக கலக்க வேண்டும். இறுதியாக ஆளி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் தூவி நன்றாக கிளற வேண்டும்.
  • அடுத்ததாக எண்ணெய் தடவிய கேக் டின்னில் கலவையை ஊற்றி சமமாக பரப்பி டின்னை 10 முறை டேபிளில் தட்ட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கேக்கில் அங்கங்கு குமிழ்கள் வராது. கேக்கானது சமமாக வேகும். கேக்கை வேகவைக்கும் முன்னர் வால்நட்ஸை கேக்கின் மேல் தூவி மைக்ரோவேவ் ஓவனில் வைத்து 180℃ -இல் 20 நிமிடத்திற்கு வேகவைக்க வேண்டும்.
  • 20 நிமிடம் கழித்து கேக்கை வெளியே எடுத்து டூத் பிக் பயன்படுத்தி குத்தி பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும்போது மாவானது டூத் பிக்கில் ஒட்டினால் மேலும் 5 நிமிடங்கள் ஓவனில் வைத்து வேகவைக்க வேண்டும்.
  • பிறகு கேக்கை ஓவனிலிருந்து எடுத்து 20 நிமிடங்களுக்கு ஆறவைக்க வேண்டும். அப்போதுதான் கேக்கை உடையாமல் எடுக்க முடியும். அற்புதமான சுவையில் பஞ்சு போன்ற மென்மையான கோதுமை - கேரட் கேக் ரெடி!
Tags:    

மேலும் செய்திகள்