சாப்பாடா? சப்பாத்தியா? - எல்லாத்துக்கும் இந்த சிக்கன் செம காம்பினேஷன்!

சிக்கனை சாதத்துடனோ அல்லது சப்பாத்தியுடனோ சேர்த்து சாப்பிட்டால் சூப்பர் காம்பினேஷன். இதனை சிக்கன் போன்ஸ் அல்லது விங்க்ஸ் கொண்டும் செய்யலாம். சிக்கன் விரும்பாதவர்கள் வேகவைத்த முட்டையைக் கொண்டும் செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.

Update:2024-02-20 00:00 IST
Click the Play button to listen to article

சைவ பிரியர்களை காட்டிலும் உலக அளவில் அசைவ உணவுகளைத்தான் நிறையப்பேர் விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக சிக்கனை விதவிதமான சுவைகளில் வித்தியாசமான பெயர்களில் சாப்பிட்டிருப்போம். வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே சுவையான பெரிபெரி பிரியாணி இலை சிக்கன் செய்வது எப்படி என செய்துகாட்டுகிறார் உலக புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர் மால்குடி கவிதா.


செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அசைவ உணவுகளை சாப்பிடும்போது செரிமானத்தை எளிதாக்க இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கிறோம்.

இவை நன்கு வதங்கியதும், அதில் சிறிதுசிறிதாக வெட்டி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

சிக்கன் பாதி வெந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சிக்கன் ப்ராத் பவுடர் ஆகியவற்றை சேர்த்து மேலும் வதக்கவும்.

சிக்கன் நன்கு வெந்ததும் அதில் தேங்காய்ப்பாலை சேர்த்து கிளறி வேகவிடவும்.

மசாலா நன்கு சுண்டி வரும்போது அதில் பெரிபெரி பவுடரை சேர்த்து நன்கு கிளறினால் சுவையான பெரிபெரி பிரியாணி இலை சிக்கன் ரெடி.

இந்த சிக்கனை சாதத்துடனோ அல்லது சப்பாத்தியுடனோ சேர்த்து சாப்பிட்டால் சூப்பர் காம்பினேஷன். இதனை சிக்கன் போன்ஸ் அல்லது விங்க்ஸ் கொண்டும் செய்யலாம். சிக்கன் விரும்பாதவர்கள் வேகவைத்த முட்டையைக் கொண்டும் செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்