ஈசியா செய்யலாம் "பனீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை" - டயட் இருக்கவங்களுக்கு ஏற்ற டிஷ்!
இதய நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் பன்னீரை உணவில் சேர்த்துக் கொண்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்க வழிவகை செய்கிறது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தினமும் பன்னீர் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அளவு புரதம் கிடைக்கும். பன்னீரை வைத்து நிறைய உணவுகள் செய்யலாம்.
புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளில் பனீரும் ஒன்று. புரதம் நிறைந்த உணவுகள் தசைகளில் ஏற்படும் காயத்தை சரி செய்ய உதவியாக இருக்கும். அதே போல கால்சியம் நிறைந்த உணவுகள் எலும்பு மற்றும் பற்களுக்கு ஊட்டம் அளிக்கும். மேலும் பனீரை உணவில் சேர்த்துக்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தினமும் பனீர் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அளவு புரதம் கிடைக்கும். அப்படிப்பட்ட பனீரை வைத்து நிறைய டிஷ்கள் தயாரிக்கலாம். பாலக் பனீர், பனீர் டிக்கா, பனீர் புர்ஜி, பனீர் 65, பனீர் பட்டர் மசாலா என ஏகப்பட்ட ஐயிட்டங்கள் செய்யலாம். அந்த வகையில் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த "பனீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை" எப்படி செய்வது? என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் சுந்தரி ராகவேந்திரன்.
செய்முறை :
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு கிளறிவிட வேண்டும். வெங்காயம் பாதி வதங்கியதும் பச்சை, மஞ்சள், சிவப்பு கலர் குடைமிளகாய்களை சேர்த்து வதக்க வேண்டும்.
குடைமிளகாய் வதங்கியதும் மசாலா பொருட்கள் சேர்க்கும் காட்சி
* வெங்காயமும், குடைமிளகாயும் 3 நிமிடங்களுக்கு வதங்கியதும், அதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி, மல்லி தூள் 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா 1/4 தேக்கரண்டி, இட்டாலியன் சீசனிங் சிறிதளவு, ஆர்கனோ சிறிதளவு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்ததாக காரத்திற்கு ரெட் சில்லி சாஸ் 1/2 தேக்கரண்டி, சோயா சாஸ் 1/2 தேக்கரண்டி, வினிகர் சிறிதளவு சேர்த்து நன்கு வதக்கவும். இந்த நேரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறிவிட வேண்டும்.
பனீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை
* பின்னர் நறுக்கி வைத்துள்ள 250 கிராம் பனீர் சேர்த்து, அது உடையாமல் கிளறி விட வேண்டும். தண்ணீர் சுண்டி வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் பனீர் வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை ரெடி!