தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் - "ஹோம் மேட் ரஃபெல்லோ பால்ஸ்"
"பேக்கிங்" என்பது தற்போது எல்லோரும் செய்யக்கூடிய அளவுக்கு சாதாரணமாகிவிட்டது. வீட்டில் இருக்கும் பெண்கள், வேலைக்கு போகும் பெண்கள், ஆண்கள், வளர் இளம் பருவத்தினர் என சமையலில் ஆர்வம் இருக்கும் பலரும் பேக்கிங் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் ஒயிட் சாக்லேட் பயன்படுத்தி வீட்டிலேயே சூப்பராக நிறைய டிஷ்ஷஸ் செய்யலாம். ஒயிட் சாக்லேட் எப்போதும் ஒரு ரிச் லுக் & டேஸ்ட் கொடுக்கும். அதை வைத்து ரிச் தீபாவளி ஸ்வீட் செய்யலாம் என சொல்லிக்கொடுத்து விளக்கமளிக்கிறார் சமையல் கலைஞர் ரீமா.
செய்முறை :
முதலில் பாதாம்களை சுடு தண்ணீரில் குறைந்தது 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
எடுத்து வைத்துள்ள 200 கிராம் ஒயிட் சாக்லேட் டபுள் பாய்லிங் முறையில் அல்லது மைக்ரோவேவ் ஓவனில் வைத்து மெல்ட் செய்ய வேண்டும்.
ஒயிட் சாக்லேட் மற்றும் ஃப்ரெஷ் கிரீமை ஒன்றாக மிக்ஸ் செய்தல்
ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஒயிட் சாக்லேட் மற்றும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் 20 நொடிகளுக்கு வைத்து எடுத்து கிளறிவிட வேண்டும். கட்டிகள் இருப்பின் மீண்டும் வைத்து உருக்கி எடுக்க வேண்டும்.
டெசிகேட்டட் கோகனட் 80 கிராம் அளவு எடுத்து, உருக்கி எடுத்துள்ள ஒயிட் சாக்லேட்டில் சேர்த்து கிளற வேண்டும். நன்கு கிளறி பிறகு 30 முதல் 40 நிமிடங்கள் வரைக்கும் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரஃபெல்லோ பால்ஸ் செய்ய தேவையான பாதாம்
இந்த நேரத்தில் ஊறவைத்த பாதாம் பருப்புகளை தோலுரித்துக்கொள்ள வேண்டும்.
ஹோம் மேட் ரஃபெல்லோ பால்ஸ்
40 நிமிடங்கள் கழித்து ஃபிரிட்ஜில் வைத்து ஒயிட் சாக்லேட் கலவையை எடுத்து, சிறு உருண்டையாக உருட்டி எடுத்து, டெசிகேட்டட் கோகனட்டில் ஒரு கோட் கொடுத்து, பாதாம் பருப்பில் ஒன்று உள்ளே வைத்து உருட்டி மீண்டும் ஒரு கோட் டெசிகேட்டட் கோகனட்டில் உருட்டி எடுத்தால் ஹோம் மேட் ரஃபெல்லோ பால்ஸ் ரெடி!