உடலுக்கு ஆரோக்கியம் தரும் கவுனி அரிசி கீர்

முக்கியமாக குழந்தைகளுக்கு இனிப்பு வகையாக செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Update:2023-08-01 10:45 IST
Click the Play button to listen to article

பூஜை மற்றும் விஷேச நாட்களில் இனிப்பு செய்ய வேண்டும் என்றால் கேசரி, சர்க்கரைப் பொங்கல் மற்றும் பாயாசம் போன்றவைதான் நமக்கு உடனடியாக நினைவுக்கு வரும். கேசரி ரெசிபி ஒரே மாதிரிதான் என்றாலும் அதை நாம் பல வண்ணங்களில் செய்யலாம். ஆனால் பாயாசமோ சேமியா பாயாசம், பருப்பு பாயாசம், பால் பாயாசம் என்று பல வகைகளாக அடுக்கிக் கொண்டே போகலாம். கவுனி அரிசியில் பாயசம் போன்று தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு வகையான ‘கவுனி அரிசி கீர்’ செய்முறையைத்தான் நாம் இங்குப் பார்க்கப் போகிறோம். பொதுவாக கவுனி அரிசி சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. ஆனால் தற்போதோ இதனை யாரும் பெரிதாக உபயோகிப்பதில்லை. இந்த கவுனி அரிசியை சாதமாக, கூழாக, இனிப்பு வகையாகவும் செய்து சாப்பிடலாம். முக்கியமாக குழந்தைகளுக்கு இனிப்பு வகையாக செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். எளிதான கவுனி அரிசி கீர் செய்முறையை இப்போது காண்போம்.


செய்முறை:

1. கவுனி அரிசியை குறைந்தபட்சம் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். முதல் நாள் இரவே ஊற வைப்பது நல்லது.

2. ஊற வைத்த கவுனி அரிசியை குக்கரில் வைத்து 5 முதல் 6 விசில்கள் வரும் வரை வேக விடவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து பாலை சுண்ட காய்ச்ச வேண்டும்.

4. நன்கு சுண்டிய பாலில் வேகவைத்த கவுனி அரிசியைச் சேர்க்கவும்.

5. பாலும் அரிசியும் நன்கு கொதித்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கலக்கி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

6. அது கொதித்த சிறிது நேரத்தில் 1 கப் தேங்காய்ப் பாலை ஊற்றவும்.

7. ஒரு கொதி வந்ததும் சிறிதளவு உப்பு மற்றும் குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

சூடான இனிப்பான கவுனி கீர் ரெடி.

குறிப்பு: முந்திரி, திராட்சை பிடிக்கும் என்பவர்கள் அவற்றை நெய்யில் வறுத்து கடைசியில் சேர்த்து கொள்ளலாம். வாசனைக்கு ஏலக்காய், பச்சை கற்பூரம் சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்