ஹெல்தியான "காளான் லெமன் ஹனி சாஸ் ஸ்டார்டர்" - வீட்டிலேயே செய்வது எப்படி?

காளான் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு போதிய சக்தியை கொடுப்பதோடு,உடல் எடை அதிகரிக்கா வண்ணம் பார்த்துக் கொள்கிறது.

Update:2024-05-14 00:00 IST
Click the Play button to listen to article

பொதுவாக நம்ம எல்லோருக்கும் காளான்னு சொன்னதும் ரோட்டு கடையில மாலை நேரத்துல கிடைக்கும் காளான் மசாலாதான் நியாபகத்துக்கு வரும். ஆனா அது முழுமையாக காளான் வைத்து செய்யப்படுவது இல்லை. முட்டை கோஸ் வச்சு பண்ணுறதுதான் அந்த காளான் மசாலா. காளான் விலை அதிகம் என்றாலும், புரதம் அதிகம் நிறைந்தது. காளானில் பல்வேறு ஊட்ட சத்துக்கள் உள்ளன. அன்றாட உணவில் காளானின் பங்கு மிகவும் முக்கியமானது. உடலுக்கு எவ்வித வியாதிகளும் வராதவாறு பார்த்துக் கொள்கிறது. காளானில் நார்ச்சத்து, செலினியம், வைட்டமின் சி, டி உள்ளிட்டவை உள்ளன. காளானை உணவில் வழக்கமாக உட்கொண்டால் மூளையின் செயல்பாடு மற்றவர்களை விட கூர்மை ஆகிவிடும். அப்படிப்பட்ட காளானை, பிரியாணி, வறுவல், கிரேவி என செய்வதுதான் பெரும்பான்மையானவர்களின் வழக்கம். ஆனால் காளானை வைத்து குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஸ்வீட் & சிம்பிள் ஸ்டார்டர் வீட்டிலேயே செய்வது எப்படி என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் வினோத். 


செய்முறை:

• முதலில் காளானை நன்கு கழுவி, பின்னர் அடி பக்கம் இருக்கும் காம்பை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் மைதா 3 கப், சோள மாவு 3 கப், சிறிது பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

 அதனுடன் கஸ்டர்ட் பவுடர், தேவைக்கேற்ப உப்பு, சிறிதளவு வெள்ளை சர்க்கரை, சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிதளவு மிளகு பொடி சேர்த்து கலந்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.

மாவு நன்கு ஊறியதும், கழுவி வைத்துள்ள காளானை அதில் போட்டு கலந்து எடுத்துக்கொண்டு, எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

• காளான்களை 2 முறை பொரிக்க வேண்டும். முதலில் லேசாக பொரித்தெடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, ஏற்கனவே லேசாக பொரித்த காளான்களை மீண்டும் எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுத்து தனியாக வைத்து கொள்வோம்.

அடுத்ததாக சாஸ் தயாரிக்க, நறுக்கி வைத்துள்ள எலுமிச்சை பழ தோல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். மீதமுள்ள கஸ்டர்ட் பவுடரையும் இதனுடன் சேர்த்துவிட வேண்டும்.

பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து, அரை கப் தண்ணீர், ஒரு தேக்கரண்டி தேன், ஒன்று முதல் ஒன்றரை தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை ஊற வைக்க வேண்டும்.

 கலவை ஊறியதும், ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் தயாரித்து வைத்துள்ள கலவையை கொட்டி நன்கு கலக்க வேண்டும். அது சிறிது வதங்கி கெட்டியானதும், பொரித்து வைத்துள்ள காளான்களை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கி வெங்காயத்தாள் சேர்த்து இறக்கினால் கலக்கல் "காளான் லெமன் ஹனி சாஸ் ஸ்டார்டர்" ரெடி.

காளானின் நன்மைகள்:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காளானை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு போதிய சக்தியை கொடுப்பதோடு,உடல் எடை அதிகரிக்கா வண்ணம் பார்த்துக் கொள்கிறது.

காளான் எலும்புகளை வலுப்படுத்துகிறது. வயது முதிர்வால் ஏற்படும் கால் வலி, மூட்டு தேய்மானம், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பார்த்துக் கொள்கிறது.

 வாயு சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்க காளான் உதவியாக இருக்கிறது. வயிற்று புண்களை சரி செய்யவும் காளான் பேருதவியாக இருக்கும்.

சரும பராமரிப்பில் காளான் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் முடி வளர்ச்சிக்கு காளான் சாப்பிடுவது உதவுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்களும் காளான் எடுத்துக் கொள்வது நல்லது. 

Tags:    

மேலும் செய்திகள்