அசத்தலா 5 நிமிடத்தில் வீட்டிலேயே "ஃபெரெரோ சாக்லேட்" செய்வது எப்படி?

உங்க வீட்டு குட்டீஸ்க்கு பிடிச்ச மாதிரி ஆரோக்கியமான மற்றும் சுவையான “ஃபெரெரோ சாக்லேட்ஸ்” வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்துவிடலாம்.

Update:2024-04-23 00:00 IST
Click the Play button to listen to article

சாக்லேட் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஒயிட் சாக்லேட் மற்றும் டார்க் சாக்லேட் வைத்து வித்தியாசமாக கோடைக்காலத்தை கொண்டாடலாம் வாங்க. உங்க வீட்டு குட்டீஸ்க்கு பிடிச்ச மாதிரி ஆரோக்கியமான மற்றும் சுவையான “ஃபெரெரோ சாக்லேட்ஸ்” வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்துவிடலாம். எடிபில் ஃபுட் கலர், சிலிக்கான் மோல்டு பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிடித்த வடிவத்தில் எப்படி எளிதாக செய்யலாம் என சொல்லிக் கொடுத்துவிளக்குகிறார் சமையல் கலைஞர் மம்தா குப்தா.


செய்முறை:

ஓவனில் 30 நொடிகளுக்கு ஒயிட் சாக்லேட் மற்றும் டார்க் சாக்லேட்டை உருக்க வேண்டும். ஓவன் இல்லையென்றால் டபுள் பாய்லிங் முறையில் சாக்லேட்டை உருக்கி எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் சூடானதும் அதன் மேல் மற்றொரு பாத்திரத்தில் தேவைக்கேற்ப சாக்லேட்டை எடுத்து உருக்க வேண்டும்.

லேசாக வறுக்கப்பட்ட ஹேசல்நட்டையோ அல்லது பாதாம், முந்திரி போன்ற உங்களுக்கு பிடித்த எந்த நட்ஸை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் அரை பந்து வடிவில் இருக்கும் வாஃபிள்ஸ்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் ஒரு வாஃபிள்ஸ் எடுத்து, அதில் உருக்கி வைத்துள்ள சாக்லேடை நிரப்பி, அந்த சாக்லேட் உள்ளே ஹேசல்நட் ஒன்றை வைக்கவும். அதேபோல் மற்றொரு வாஃபிள்ஸ் தயார் செய்து இரண்டையும் ஒரு பந்து போல இணைத்துக்கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப ஐந்து முதல் பத்து வரை இந்த பந்துகளை தயாரித்து, அதனை 10 நிமிடங்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்க வேண்டும்.

பிறகு அந்த பந்துகளை ஏற்கனவே உருக்கி வைத்துள்ள சாக்லேட்டில் ஒரு டிப் செய்து கொள்வோம். பின் அந்த பந்துகளை கிரஞ்சி ரைஸ் பால்ஸ் தூவி மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் குழந்தைகள் விரும்பும் "ஃபெரெரோ சாக்லேட்ஸ்" ரெடி.

உருக்கி வைத்துள்ள ஒயிட் சாக்லேட் மற்றும் டார்க் சாக்லேட்டை சிலிக்கான் மோல்டுகளில் ஊற்றி அதனை ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்களுக்கு வைத்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளலாம்.

எடிபில் ஃபுட் கலரை இந்த சிலிக்கான் மோல்டுகளின் உள்ளே தடவி அதன் மேல் உருக்கி வைத்துள்ள சாக்லேடை ஊற்றி ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்களுக்கு வைத்து எடுத்தால், கலர்ஃபுல் சாக்லேட் ரெடி.

டார்க் சாக்லேட்டின் நன்மைகள்

• கோகோ அதிகம் கொண்ட டார்க் சாக்லேட்டுகளில் ஊட்டச்சத்து நிறைய உள்ளது.

• டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், வீக்கத்தை குறைக்கவும், ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.

• டார்க் சாக்லேட்டில் உள்ள சத்துக்கள் பல நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.

• டார்க் சாக்லேட்டில் எண்டோர்பின்கள் மற்றும் செரோடோனின் வெளியீட்டைத் தூண்டக்கூடிய கலவைகள் உள்ளன.

• இவை மகிழ்ச்சியான உணர்வுகளை தூண்டக்கூடியவை.

• இதை உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைத்தாலும், அதிகமாக உட்கொள்ளவும் கூடாது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

Tags:    

மேலும் செய்திகள்