10 நிமிடங்களில் ஈஸியாக செய்யலாம் அரோமா மிக்க கோகனட் குக்கீஸ்!

வீட்டிலிருந்தபடியே சிறுதொழில் செய்ய நினைப்பவர்கள் ஒருநாளில் இரண்டு மணிநேரம் செலவிட்டால் போதும், இதுபோன்ற பிசினஸை செய்து சம்பாதிக்கலாம். முதலில் வீட்டிலிருப்பவர்களுக்கு பிஸ்கட் செய்துகொடுத்து நன்றாக பழகியபிறகு பிசினஸாகத் தொடங்கலாம்.

Update:2024-06-25 00:00 IST
Click the Play button to listen to article

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று குக்கீஸ். தினமும் டீ, காபியுடன் பிஸ்கட் அல்லது குக்கீஸ் இல்லாவிட்டால் பலருக்கும் அது முழுமையடையாது. அப்படி அனைவரும் விரும்பி உண்ணும் குக்கீஸை வீட்டிலேயே ஆரோக்கியமாக, அதேசமயம் எளிதாக செய்யலாம். வெறும் 10 நிமிடங்கள் இருந்தாலே போதும், சுவையான கோகனட் குக்கீஸை நமக்கு விருப்பமான வகையில் செய்து அசத்தலாம் என்கிறார் சமையல் கலைஞர் தாமரை செல்வி.


செய்முறை:

ஓடிஜி ஓவனை 170 டிகிரியில் 10 நிமிடங்கள் ப்ரீ-ஹீட் செய்யவும். அதற்குள், உப்பில்லாத வெண்ணெயை வெளிரிய நிறமாக மாறும்வரை ப்ளெண்டரால் நன்றாக பீட் செய்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து மீண்டும் பீட் செய்யவும். இந்த கலவை கெட்டியாக இருக்கவேண்டும்.

அதனுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், மைதா மாவு சேர்த்து ப்ளெண்டரால் நன்றாக பீட் செய்யவும். மைதாவுக்கு பதிலாக கோதுமை மாவையும் சேர்த்துக்கொள்ளலாம். பீட் செய்யும் முன்பு மாவை சற்று கிளறிவிட வேண்டும். இல்லாவிட்டால் மாவு பறந்துவிடும். வேண்டுமானால் பேக்கிங் சோடாவிற்கு பதிலாக சிறிது சால்ட் சேர்க்கலாம்.


மாவை குக்கீஸ்களாக திரட்டி ட்ரேயில் அடுக்குதல்

மாவை சற்று உதிரி உதிரியாக ப்ளெண்ட் செய்தபிறகு அதில் ட்ரை கோகனட்டை சேர்க்கவும். அதனுடன் ஃபுட் கோகனட் எசன்ஸை ஊற்றி, நன்றாக ப்ளெண்ட் செய்யவும்.

ட்ரை கோகனட் கிடைக்காதவர்கள், தேங்காயைத் துருவி எண்ணெய் போக வறுத்து பயன்படுத்தலாம்.

இப்போது குக்கீஸ்க்கான மாவு தயாராகிவிட்டது. இந்த மாவை கைகளில் ஒட்டாத பதத்திற்கு நன்கு பிசைந்து பிஸ்கட்களாக திரட்டவும்.


குக்கீஸ்களின்மீது டிசைனர் கொண்டு பிடித்தமான டிசைனை போடுதல்

குக்கிங் ட்ரேயில் பட்டர் ஷீட் போட்டு, அதன்மீது திரட்டிய பிஸ்கட் மாவை அடுக்கிவைத்து, வேண்டுமானால் டிசைனர் கொண்டு பிஸ்கட் மேலே டிசைன் செய்து ஓவனில் வைக்கவேண்டும்.

10 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை வெளியே வைக்கவேண்டும். 150 கிராம் மைதாவிற்கு 25 முதல் 30 குக்கீஸ்களை செய்யலாம்.


சுட்டெடுக்கப்பட்ட கோகனட் குக்கீஸ்

ஓடிஜி ஓவன், ப்ளெண்டர் போன்றவற்றை குறைந்தது 5 ஆயிரத்துக்குள் வாங்கிவிடலாம். வீட்டிலிருந்தபடியே சிறுதொழில் செய்ய நினைப்பவர்கள் ஒருநாளில் இரண்டு மணிநேரம் செலவிட்டால் போதும், இதுபோன்ற பிசினஸை செய்து சம்பாதிக்கலாம். முதலில் வீட்டிலிருப்பவர்களுக்கு பிஸ்கட் செய்துகொடுத்து நன்றாக பழகியபிறகு பிசினஸாகத் தொடங்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்