குழந்தைகள் கேட்கும் நேரத்தில் "வீட்டிலேயே பீட்சா" செய்யலாம் - ஹெல்தி & டேஸ்டி ரெசிபி

Update:2024-09-10 00:00 IST
Click the Play button to listen to article

குழந்தைகளுக்கு துரித உணவுகளின் மீது இருக்கும் ஆர்வத்தை கட்டுப்படுத்துவது என்பது கடினமான ஒன்று. பீட்சா, பர்கர், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் என அவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஆனால் இதுபோன்ற துரித உணவினால் உடலில் பலவித பிரச்சினைகள் ஏற்படும். குழந்தைகளை பொறுத்தவரை ஹார்மோன் பிரச்சினை, உடல் பருமன் உள்ளிட்ட உபாதைகள் வரக்கூடும். அப்படி இருக்கையில், குழந்தைகளுக்கு பிடித்த இதுபோன்ற உணவுகளை வீட்டிலேயே, ஹெல்தியாக செய்து கொடுப்பது நல்லது. அந்த வகையில் ரொட்டியை பயன்படுத்தி சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த Bread Pizzaசெய்வது எப்படி? என சொல்லிக் கொடுக்கிறார் சமையல் கலைஞர் சுந்தரி ராகவேந்திரன்.

செய்முறை :

அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். அடுத்ததாக பொடியாக நறுக்கி வைத்துள்ள 1/2 தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.


தேவையான சீசனிங் சேர்த்து வதக்குதல்

அதன்பிறகு பொடியாக நறுக்கிவைத்துள்ள 1/2 கேப்சிகத்தை அதனுடன் சேர்க்க வேண்டும். பச்சை வாசனை போக வதக்கிய பிறகு வேகவைத்த ஸ்வீட் கார்னை தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் ஒன்றுசேர நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் ரெட் சில்லி ஃபிளேக்ஸ் சிறிதளவு, இட்டாலியன் சீசனிங் சிறிதளவு, ஆரிகனோ சிறிதளவு சேர்த்து 1 நிமிடத்திற்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிரட் துண்டுகளில் ஒரு பக்கம் மட்டும் நெய் தடவிக்கொள்ள வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், நெய் தடவிய பிரட் துண்டை தோசைக்கல்லில் வைத்து, வதக்கி வைத்துள்ள வெஜ் கலவையை அதன் மேல் 2 ஸ்பூன் எடுத்து பரப்பிக்கொள்ள வேண்டும்.


நெய் தடவிய தோசைக்கல்லில் பிரட் வைத்து, அதன்மேல் வெஜ் கலவையை வைக்கும் முறை

நறுக்கி வைத்துள்ள பிளாக் ஆலிவையும் அதன் மேலே போட்டு, பிறகு சீஸ் ஸ்லைசை வைத்து, அது மெல்ட் ஆகும்வரை வேக வைத்து எடுத்தால் Home Style பிரட் பீட்சா ரெடி!


Home Style பிரட் பீட்சா 

இறுதியாக இட்டாலியன் சீசனிங் மற்றும் ரெட் சில்லி ஃபிளேக்ஸை பீட்சாவின் மேல் தூவி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்