வாய் கசப்பைப் போக்கும் கறிவேப்பிலை மிளகு குழம்பு!
காய்ச்சல் வந்தவர்களுக்கு வாய் கசப்பு இருப்பது சகஜம்தான். அந்த சமயத்தில் காரமாகவோ புளிப்பாகவோ வாய்க்கு இதமானதை சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தோன்றும். அப்படி காரமும் புளிப்பும் நிறைந்த ரெசிபிக்களில் ஒன்றுதான் கறிவேப்பிலை மிளகு குழம்பு. இதற்கு தேவையான பொருட்களையும் செய்முறையையும் இங்கு காண்போம்.
By : ராணி
Update:2023-10-24 00:00 IST
காய்ச்சல் வந்தவர்களுக்கு வாய் கசப்பு இருப்பது சகஜம்தான். அந்த சமயத்தில் காரமாகவோ புளிப்பாகவோ வாய்க்கு இதமானதை சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தோன்றும். அப்படி காரமும் புளிப்பும் நிறைந்த ரெசிபிக்களில் ஒன்றுதான் கறிவேப்பிலை மிளகு குழம்பு. இதற்கு தேவையான பொருட்களையும் செய்முறையையும் இங்கு காண்போம்.
செய்முறை:
- முதலில் அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மிளகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். இரண்டும் பாதி வதங்கிய நிலையில் கறிவேப்பிலை சேர்த்து அது பொரியும் வரை அடுப்பை குறைந்த தீயில் வைத்து எண்ணெயில் நன்றாக வறுக்தெடுக்க வேண்டும். பின்னர் அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
- மீண்டும் கடாயை வைத்து 3 டீஸ்பூன் செக்கு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு சேர்த்து வெடித்ததும், வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து புளி தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிட வேண்டும்.
- அடுத்து அரைத்து வைத்த கறிவேப்பிலை பொடியை மெல்ல மெல்ல கொதிக்கும் குழம்பில் சேர்க்க வேண்டும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து புளிகாய்ச்சல் பதம் வரும்வரை சுமார் 5 - 10 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.
- பூண்டு அல்லது சுண்டைக்காய் விரும்புபவர்கள் இறுதியில் அதை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து கொதித்த குழம்பில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கறிவேப்பிலை மிளகுக் குழம்பை 3 நாட்களுக்குக்கூட வைத்து சாப்பிடலாம்.