"கருங்குறுவை அரிசியில் முறுக்கு" செஞ்சி பாருங்க - இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், புட்டும் செய்யலாம்!

தீபாவளி, ஊர் திருவிழா, வீட்டு விசேஷங்களில் செய்யப்படும் பலகாரங்களை மாலை நேரத்தில் ஒரு டீயோடு கொரிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான்.

Update: 2024-06-03 18:30 GMT
Click the Play button to listen to article

நம்மில் பலருக்கு நொறுக்குத்தீனிகளை கொரிக்க பிடிக்கும். தீபாவளி, ஊர் திருவிழா, வீட்டு விசேஷங்களில் செய்யப்படும் பலகாரங்களை மாலை நேரத்தில் ஒரு டீயோடு கொரிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான். எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் இவ்வகை தீனிகளை கொரிப்பதால் உடலுக்கு பல தீமைகள் உண்டாவதை தவிர்க்க வேண்டும் என நாம் அனைவரும் நினைப்பதுண்டு. ஆனால் இன்னும் சிலர் அதை தவிர்க்க முடியாமல் இருப்பார்கள். அதேநேரம் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் உள்ளிட்டவற்றில் நொறுக்குத் தீனிகளை செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும். அந்த வகையில் ஆரோக்கியமான முறையில் ஊட்டச்சத்து நிறைந்த கருங்குறுவை அரிசியை வைத்து முறுக்கு செய்யவது எப்படி என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் சீதாராமன்.


செய்முறை:

* கருங்குறுவை அரிசி மற்றும் பச்சரிசி இரண்டையும் நன்கு கழுவி 8 மணி நேரத்துக்கு ஊற வைத்து, ஈரம் வடிய காய வைத்து முறுக்கு மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.


கருங்குறுவை அரிசி முறுக்கு செய்ய தேவையான அடிப்படை பொருட்கள்

* அரைத்த இந்த மாவை சிறிது சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு, சிறிதளவு பெருங்காயம், சீரகம் சேர்க்க வேண்டும்.

* பின்னர் ஒரு கைப்பிடி உளுந்து வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வேக வைத்த உளுந்தை அரைத்து வைத்துள்ள மாவுடன் கலந்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது கடலை எண்ணெயை சூடு பண்ணி ஊற்றி முறுக்கு மாவு பதத்தில் பிசைய வேண்டும்.


வேக வைத்த உளுந்தை அரைத்து வைத்துள்ள மாவுடன் கலக்குதல்

* முறுக்கு பிழியும் அச்சில் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து, தேவையான வடிவத்தில் பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், பிழிந்து வைத்துள்ள மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.


வாழை இலையில் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து தயாரான கருங்குறுவை அரிசி முறுக்கு

* சூடு ஆறியதும் பரிமாறினால், ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த கருங்குறுவை அரிசி முறுக்கு ரெடி!

கருங்குறுவை அரிசியின் நன்மைகள்:

* கருங்குறுவையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை தடுக்கும்.

* புரதம் மற்றும் மாவுச்சத்து நிறைந்த கருங்குறுவை உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.

* ஆர்கானிக் கருங்குறுவை அரிசியில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது.

* சருமம் பளபளவென இருக்க, வயது முதிர்வை தடுக்க கருங்குறுவை உதவியாக இருக்கும்.

* யானைக்கால் அல்லது காலரா நோய் வராமல் இருக்க கருங்குறுவை அரிசி பயன்படும்.

* கருங்குறுவை அரிசியில் தோசை, இட்லி, ஆப்பம், இடியாப்பம், புட்டு என பல்வேறு உணவுகளை செய்து சாப்பிடலாம். 

Tags:    

மேலும் செய்திகள்