அசத்தலான "மீன் வடை" இப்படி செஞ்சி பாருங்க - அசைவ பிரியர்கள் கவனத்திற்கு!

ன் வகையில் ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் எதுவென்றால் கானாங்கெளுத்தி தான். கானாங்கெளுத்தி என்பது நாளடைவில் காணங்கத்த என சொல்லாடலை பெற்றது என்றும் சொல்லலாம். இந்த மீனை சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

Update:2024-07-16 00:00 IST
Click the Play button to listen to article

அசைவ உணவு  சாப்பிடுபவர்களுக்கு அதன் மீதான ஆர்வம் கட்டுப்படுத்த முடியாதது. ஞாயிற்றுகிழமைகளில் சிக்கன், மட்டன், மீன் என வகை வகையாக சமைத்து சாப்பிட வேண்டும் என கண்டிப்பாக தோன்றும். இதில் மீன்வகைகளில் ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் எதுவென்றால் காணாங்கெளுத்திதான். காணாங்கெளுத்தி என்பது நாளடைவில் காணங்கத்த என சொல்லாடலை பெற்றது. இந்த மீனை சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் புரதம், வைட்டமின் D அதிகம் உள்ளது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் மீன் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். சிக்கன் கட்லெட், மட்டன் கோலா உருண்டை என செய்து சலித்தவர்களுக்கு காணாங்கெளுத்தி மீன் வைத்து சுவையான வடை எப்படி செய்யலாம் என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் கவிதா.


செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் காணங்கத்த மீனை 2 எடுத்துக்கொண்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தண்ணீரை வடித்து மீன்களில் முள்ளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.


உப்பு, மஞ்சள் போட்டு வேக வைத்த 'காணங்கத்த மீன்'

* அடுத்ததாக பெரிதாக 2 வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சோம்பு சிறிதளவு ஒன்றுக்கு இரண்டாக நுணுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

* முள்ளை நீக்கி எடுத்து வைத்துள்ள மீனை, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதளவு மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.


மீன் வடை மாவை, வாழை இலையில் தட்டும் காட்சி 

 * பிறகு சோள மாவு ஒரு தேக்கரண்டி, பொடித்து வைத்துள்ள சோம்பு சிறிதளவு, 1 முட்டையை எடுத்து அதன் வெள்ளை கருவை மட்டும் அதனுடன் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* அடுத்ததாக அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், 3 தேக்கரண்டி எண்ணெய்யை ஊற்றி, பிசைந்து வைத்துள்ள மீன் வடை மாவை அளவாக எடுத்து, வாழை இலையில் தட்டி தோசைக்கல்லில் போட வேண்டும்.


சுவையான மீன் வடை ரெடி! 

* இரண்டு பக்கமும் கோல்டன் பிரவுன் கலர் வந்ததும் எடுத்தால், சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த மீன் வடை ரெடி!

Tags:    

மேலும் செய்திகள்