கமல்ஹாசனுக்கு "உலகநாயகன்" பட்டம் கொடுத்தது யாரு? Happy Birthday உலகநாயகன்...

Update: 2024-11-07 07:28 GMT
Click the Play button to listen to article

யாரென்று புரிகிறதா... இவன் தீயென்று தெரிகிறதா...! உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு, உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு, உலக நாயகனே...! போன்ற பாடல்கள் உண்மையில் கமல்ஹாசனுக்கு கனகச்சிதமாக பொருந்தக்கூடியவை. 70-வது அகவையில் அடியெடுத்து வைத்துள்ள உலகநாயகனின் சிறப்புகளை பார்ப்போம். 

களத்தூர் கண்ணம்மாவில் தன் திரைப்பயணத்தை தொடங்கி நடிப்பு, இசை, நடனம், இயக்கம், திரைக்கதை, பாடலாசிரியர், பாடகர், படத்தொகுப்பாளர் என சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் தடம்பதித்து உலகநாயகனாக, ஈடில்லா கதாநாயகனாக ஜொலிக்கும் ஒரே கலைஞன் கமல்ஹாசன்.

சினிமாவும், அரசியலும் வெவ்வேறு இல்லை என்று சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் சமூகத்திற்கான முற்போக்கு சிந்தனைகொண்ட கருத்துகளை இம்மி அளவும் பயமின்று உரக்க பேசக்கூடியவர்.

இந்திய சினிமாவின் பிதாமகன் என்றே கமல்ஹாசனை சொல்லலாம். சினிமாவில் புது புது யுக்திகளையும், டெக்னாலஜிகளையும் அறிமுகம் செய்து, பல தோல்விகளை வெற்றிகளாக மாற்றிய கலைஞன் அவர். ரொமான்டிக், காமெடி, ஆக்சன், திரில்லர், ஃபிக்‌ஷன் போன்ற பல்வேறு ஜோனர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்களை பிரம்மிக்க வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.

இவர் தமிழில் இயக்கிய முதல் படம் ஹேராம். உண்மை கதையும் புனைக்கதையும் சேர்த்து இவர் எழுதிய திரைக்கதை அன்று தோற்றுப்போனாலும், இன்றளவில் அது அனைத்து திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் பல திரைப்பட கலைஞர்களுக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

கமல்ஹாசனுக்கு உலகநாயகன் என தெனாலி படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் வரவேண்டும் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சொல்ல... வேண்டாம் என்று கமல்ஹாசன் மறுத்துள்ளார். ஆனால் இன்றளவில் கமல்ஹாசனுக்கு ஏற்ற சரியான பொருத்தமான பெயராக உலகநாயகன் மட்டுமே உள்ளது.

இன்று 70-வது பிறந்தநாளை காணும் உலகநாயகன், இன்னும் நிறைய நல்ல படைப்புகளை மக்களுக்கு அளித்து மகிழ்விக்க வேண்டி ராணி ஆன்லைன் சார்பாக வாழ்த்துகிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்