சினிமா என்னங்க? சீரியல் வாய்ப்புக்கே அட்ஜஸ்ட்மெண்ட் தான்? ஆசை வார்த்தைகளை நம்பும் நடிகைகள்!

பெரிய சீரியல் இயக்குநர்களின் கீழ் நடிக்கும்போது அவர்களுக்கு தெரியாமல் அங்கு பணிபுரியும் பல உதவி இயக்குநர்கள் துணை நடிகைகளை இதுபோன்ற அட்ஜஸ்ட்மெண்ட்களுக்கு அழைப்பதாக சொல்கின்றனர். சீன்களுக்கு நடுவே அங்குள்ள அறைகளுக்கு அவர்களை அழைத்துச்சென்று ஆசைக்கு இணங்கவைக்கின்றனர்;

Update:2025-04-15 00:00 IST
Click the Play button to listen to article

பிரபல தமிழ் சீரியலில் நடித்துவரும் இளம்நடிகை ஒருவர் வாய்ப்புக்காக இயக்குநர் ஒருவரிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததாக அடுத்தடுத்த வீடியோக்கள் வெளியாகி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது AI மூலமாக செய்யப்பட்டிருக்கலாம் என்பது போன்று மறைமுகமாக அந்த பெண்ணின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும் பெரிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்களைவிட, சாதாரண படங்கள் மற்றும் சீரியல்களில் வேலைசெய்கிறவர்களே துணை நடிகைகளை வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வைத்து ஏமாற்றுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் வெளியான வீடியோவில் இருக்கும் நடிகை யார்? உண்மையில் என்ன நடந்தது? அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்கள் என்ன? பார்க்கலாம்.

அடுத்தடுத்து வெளியான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோக்கள்!

முன்பெல்லாம் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு வெள்ளித்திரை வாய்ப்பு என்பது பெரும் கனவு என்று சொல்லப்பட்டாலும், சின்னத்திரையில் நடித்த பலர் அந்த ஸ்டீரியோடைப்பை உடைத்து பெரிய திரையிலும் நடித்துவருகின்றனர். அப்படி ‘கார்த்திகை தீபம்’ என்ற சீரியல்மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் ஸ்ருதி நாராயணன். அந்த சீரியலில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க, அதனைத் தொடர்ந்து ‘மாரி’ சீரியலில் நடித்தார். அடுத்து ‘சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அந்த சீரியல்தான் தமிழ்நாட்டில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ருதிக்கு ‘சிட்டாடல் ஹனி பனி’ என்ற வெப் தொடரில் முக்கிய ரோலும் கிடைத்தது. இப்படி வேகமாக வளர்ந்துவந்த இவர் அடுத்து திரைப்படத்திலும் கமிட்டானார். இந்நிலையில் இவருடைய அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. அந்த வீடியோ ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்து சமூக ஊடகங்களிலும் மிகவும் வைரலானதை அடுத்து அந்த வீடியோவை AI மூலம் உருவாக்கி இருக்கலாம் என்று முதலில் தெளிவுப்படுத்திய போதிலும் அந்த வீடியோ தொடர்ந்து பரவிவந்ததால் அதுகுறித்து ஸ்ருதி பின்னர் விளக்கமளித்திருந்தார். அதில், இந்த விஷயத்தில் அனைத்துமே எல்லைமீறி போய்விட்டதாகவும், செல்போன் திரைக்கு பின்னால் இருந்துகொண்டு உண்மை என்று உறுதிப்படுத்தப்படாத ஒன்றை வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க துடிக்கிற அசிங்கமான மனிதர்களை பற்றி பேச யாருக்கும் நேரமில்லை என்றும் கூறியிருந்தார்.


சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ வெளியீடால் ஏற்பட்ட சர்ச்சை

மேலும் ஒரு பெண்ணைச் சுற்றித்தான் இந்த விஷயம் நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றி யோசிக்க யாருக்கும் நேரமில்லை எனவும், இதனால் அந்த பெண் மனரீதியாக பாதிக்கப்படலாம் எனவும், நானும் உணர்ச்சிகளைக்கொண்ட ஒரு பெண் என்பதை புரிந்துகொண்டு இதை நிறுத்துமாறும் கூறியிருந்தார். ஸ்ருதி இந்த விளக்கத்தை அளித்த ஓரிரு நாட்களிலேயே அவருடைய மற்றொரு அந்தரங்க வீடியோ வெளியானது. இதனால் ஸ்ருதிக்கு எதிராக பிரபலமான இயக்குநர் ஒருவர்தான் திட்டமிட்டு இந்த வேலையை செய்வதாக கூறப்பட்டது. அதற்கு 15 படங்கள் இயக்கிய ஒரு இயக்குநர்தான் திட்டமிட்டு அந்த வேலையை செய்தார் என்று ஸ்ருதி கூறியிருந்தார். வெறும் 23 வயதேயான ஸ்ருதியின் குறுகியகால வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் யாரோதான் இந்த வேலையை செய்திருக்கிறார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவரவர் வேலையை பாருங்கள் என்று ஸ்ருதிக்கு ஆதரவாகவும் சிலர் பேசிவருகின்றனர். இந்நிலையில் ‘கட்ஸ்’ என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருக்கும் ஸ்ருதி, அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவில் தன்னைப் பற்றி பரவும் செய்திகள் குறித்து விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் குறித்து மட்டும் பேசிவிட்டு சென்றார். இதனால் அந்த வீடியோக்கள் உண்மையாகக்கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளை தைரியமாக கையாள வேண்டும்!

ஸ்ருதி நாராயணனின் வீடியோ போன்று இதற்கு முன்பே பல நடிகைகளின் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பெரும் சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. உதாரணத்திற்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடிகை ஓவியாவின் வீடியோ ஒன்று வெளியாகி சமூக ஊடகங்களில் வைரல் செய்யப்பட்டது. வெறும் 17 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவை பலரும் பரப்பியதுடன், ஓவியாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களிலும் அதுகுறித்து கமெண்ட் செய்தனர். ஆனால் மற்ற நடிகைகளை போல அதுகுறித்து கவலைப்படாமல் ‘என்ஜாய்’ என்றும், நீளமான வீடியோ கிடைக்குமா என்று கேட்டதற்கு ‘அடுத்த முறை’ என்றும் கமெண்ட் செய்திருந்தார். ஓவியாவின் இந்த மன தைரியத்தை பலரும் பாராட்டினர். இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இந்த செயலை செய்த நபர் குறித்து திரிச்சூர் காவல்நிலையத்தில் ஓவியா புகாரளித்ததுடன், கடந்த சில ஆண்டுகளாக தாரிக் என்ற நபருடன் தான் நெருங்கி பழகிவந்ததாகவும், அவருடைய நடவடிக்கைகள் பிடிக்காததால் பிரிந்துவிட்டதாகவும், அதனால் ஓவியாவை பழிவாங்கும் நோக்கில் தாரிக் அந்த வீடியோவை வெளியிட்டதுடன் அவரிடம் மேலும் பல பெண்களின் இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.


நடிகைகள் ஓவியா மற்றும் ராஷ்மிகாவின் அந்தரங்க வீடியோக்கள் வெளியானபோது இருவரின் நடவடிக்கை

அதேபோல் பாலிவுட் நடிகைகளான கத்ரீனா கைஃப், ஆலியா பட் போன்றோரின் டீப் ஃபேக் செய்யப்பட்ட வீடியோக்கள் கடந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகின. அந்த வரிசையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை வைத்தும் ஒரு வீடியோ வெளியானது. ஆனால் மற்ற நடிகைகளைப் போல அவர் அதை கண்டுகொள்ளாமல் விடவில்லை. அதுகுறித்து புகாரளித்ததுடன் குற்றவாளியை கண்டுபிடித்து கைதுசெய்யும் வரையிலும் அவர் ஓயவில்லை. இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகை இதுபோன்று தன்னைப்பற்றி வெளியான வீடியோ குறித்து தகுந்த நடவடிக்கை எடுத்ததையடுத்து இணைய குற்றங்களுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ள ராஷ்மிகாவிடம் கோரிக்கை வைத்ததோடு, அவரை இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய விளம்பர தூதராகவும் நியமித்து பெருமைப்படுத்தியது உள்துறை அமைச்சகம்.

‘காஸ்ட்டிங் கவுச்’ என்ற பெயரில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்ஸ்!

சினிமா என்றாலே அட்ஜஸ்ட்மெண்ட் என்பது எழுதப்படாத சட்டம் என்று கூறப்படுகிறது. எந்த திரையுலகை எடுத்துக்கொண்டாலும் ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவரும் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்யவேண்டும் என்பதை வெளிப்படையாகவே கேட்பார்கள் என்று பல நடிகைகள் நேர்க்காணல்களில் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, தற்போது முன்னணி நடிகைகளாக வலம்வரும் பலர், பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இதுபோன்ற அட்ஜஸ்ட்மெண்ட்களில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதுகுறித்து ஒருசில முன்னணி நடிகைகள் சில நேரங்களில் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டும் இருக்கின்றனர். சிலர் தனக்கு இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடந்தபோது அதுகுறித்து பேசமுடியாவிட்டாலும், ‘மீ டூ’ என்ற இயக்கம் மிகவும் பிரபலமானபோது அதுகுறித்து பேசினர். ஆனால் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று ஒருசிலர் இதுபோன்ற அனுசரிப்புகளுக்கு ஒத்துப்போகவில்லை என்று தைரியமாக கூறியிருக்கின்றனர். அதேசமயம் வெளியே சொன்னால் தனக்குத்தான் பிரச்சினை வரும் என்று சொல்லாமல் விட்ட நடிகைகளும் இருக்கிறார்கள்.


சினிமா மற்றும் சீரியல் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் அட்ஜஸ்ட்மண்ட் டார்ச்சர்

சினிமாவில்தான் இப்படி நடக்கிறது என்று பார்த்தால் சீரியல் நடிகைகளுக்கும் அதே நிலைமைதான் என்று சொல்கின்றனர் சில முன்னணி சீரியல் நடிகைகள். குறிப்பாக, பெரிய சீரியல் இயக்குநர்களின் கீழ் நடிக்கும்போது அவர்களுக்கு தெரியாமல் அங்கு பணிபுரியும் பல உதவி இயக்குநர்கள் துணை நடிகைகளை இதுபோன்ற அட்ஜஸ்ட்மெண்ட்களுக்கு அழைப்பதாக சொல்கின்றனர். சீன்களுக்கு நடுவே அங்குள்ள அறைகளுக்கு அவர்களை அழைத்துச்சென்று, அடுத்து பெரிய ரோலில் நடிக்க வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி தங்களுடைய ஆசைக்கு இணங்கவைப்பதாக பிரபல டிவி சீரியல் நடிகை ஒருவர் வெளிப்படையாகவே கூறியிருந்தார். மேலும் இதுபோன்று கேட்கும்போது அதுகுறித்து பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக வெளியே சொல்லவேண்டும் எனவும், போலீஸில் புகார் அளிக்கவேண்டும் எனவும் கூறியிருந்தார். அந்த ஒரு நடிகை மட்டுமல்லாமல் இதுபோன்று நடிப்புத்துறைக்கு ஆர்வமாக வரும் பெண்களை ஆசைவார்த்தை கூறி தங்களுடைய பாலியல் இச்சைகளுக்கு ஆளாக்கும் நபர்கள் குறித்தும், வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி தனது ஆசைக்கு இணங்கவைப்பவர்கள் குறித்தும், ஃபேக் வீடியோக்களை வெளியிடுவோர் குறித்தும் உடனடியாக புகாரளிக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். டீப் ஃபேக் மூலம் மார்பிங் செய்து தவறான வீடியோக்கள் வெளியிடுவோருக்கு ஒரு லட்சம் வரை அபராதத்துடன்கூடிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு அறிவித்திருந்தாலும் காஸ்ட்டிங் கவுச் என்ற பெயரில் திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அவலங்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் இயற்றவேண்டுமெனவும் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்