திரையரங்குகளில் ரீ-ரிலீஸான 'வடசென்னை' திரைப்படம்

'வடசென்னை' திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் அதனை கொண்டாடும் விதமாக மீண்டும் தியேட்டரில் வெளியிடப்பட்டது.

Update: 2023-10-13 09:54 GMT

'வடசென்னை' திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் அதனை கொண்டாடும் விதமாக மீண்டும் தியேட்டரில் வெளியிடப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இளம் வயதிலேயே சினிமாத்துறையில் அடி எடுத்துவைத்த இவர், இன்று இந்திய அளவில் அசைக்க முடியாத இடத்தில் தனக்குரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றிருக்கிறார். பொதுவாகவே தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் வரும் படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருப்பது வழக்கம்தான். அந்த வகையில் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'அசுரன்', 'வடசென்னை' போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த திரைப்படங்களாகும்.

'வடசென்னை' திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷின் நடிப்பில் வெளிவந்தது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.


இயக்குநர் வெற்றிமாறனுடன் நடிகர் தனுஷ்

வடசென்னை மக்களின் வாழ்க்கைமுறையை கதையாக சொல்லும் இப்படத்தில் இடம்பெற்ற ராஜன் மற்றும் அன்பு கதாப்பாத்திரங்கள் மக்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்டது. மேலும் திரைக்கதை, இசை, வசனங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்து பெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றுவரை ஏராளமானோர் வடசென்னை பாகம் இரண்டு திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர்.

வடசென்னை ரீ - ரிலீஸ்: 

இந்நிலையில் 'வடசென்னை' திரைப்படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்ததை கொண்டாடும் விதமாக சென்னை கமலா திரையரங்கில் ‘வடசென்னை’ படத்தை ரீ -ரிலீஸ் செய்துள்ளது திரையரங்கு நிர்வாகம். இதில் ஒரு டிக்கெட்டின் விலை 49 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டு நேற்று முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு திரைப்படம் மாலை மற்றும் இரவு நேரக் காட்சிகளாக திரையிடப்பட்டு வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்