இயக்குநர் ஆகிறாரா யுவன் சங்கர் ராஜா? - இந்த வார கோலிவுட் ட்ரெண்ட்ஸ்!

இதுவரை வெளியான ராணுவ படங்களிலிருந்து ‘அமரன்’ திரைப்படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் எனவும், சிவகார்த்திகேயனை படம் முழுக்க ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் பார்க்கமுடியும் என்றும் படக்குழு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவிருப்பதால் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Update: 2024-10-21 18:30 GMT
Click the Play button to listen to article

கடந்த சில வாரங்களாகவே டாப் ஸ்டார்களின் பட ரிலீஸ் மற்றும் வசூல் வேட்டை குறித்தே தொடர் செய்திகள் வெளியான நிலையில், இந்த வாரம் சிறு பட்ஜெட் படங்கள் குறித்தும் நிறைய அப்டேட்ஸ் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, அறிமுக இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் படங்கள் குறித்த போஸ்டர்களும், க்ளிம்ப்ஸ்களும் வெளியாகி கோலிவுட்டை கிறங்கடித்து வருகிறது. அப்படியிருக்கையில்  பெரிய ஸ்டார்களின் அறிவிப்பு இல்லாமலா இருக்கும்? இந்த வார சினிமா அப்டேட்களின் ஒரு க்ளான்ஸ் உங்களுக்காக...

சூர்யா 44 குறித்து சூப்பர் அப்டேட்!

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில், ‘கங்குவா’ படத்தின்மீது அவருடைய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். மேலும் இப்படம் பான் இந்தியா படமாக உருவாகியிருப்பதால் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44’ என்ற பெயரிடப்படாத படத்திலும் சூர்யா நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் க்ளிம்ப்ஸ் ஒன்று வெளியிடப்பட்டது.


சூர்யா 44 குறித்து அப்டேட் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

அதை வைத்து இப்படம் ஒரு கேங்க்ஸ்டர் படமாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்டது என படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருக்கிறார். மேலும் இதுவரை காதல் படங்களே தான் இயக்கியதில்லை என்றும், முதல்முறை இதுபோன்ற கதையம்சம் கொண்ட படத்தை இயக்குவதால் இப்படம் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் டு இயக்குநர்!

யுவன் சங்கர் ராஜாவின் இசையை பிடிக்காதவர்கள் இருக்கமுடியாது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் இசையமைப்பாளரான இவருடைய பாடல்கள் இன்றுவரை பலரின் ப்ளே லிஸ்ட்டில் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன. இருப்பினும் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தில் யுவனின் இசை பெரிதாக எடுபடவில்லை. இசையமைப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உருவெடுத்த யுவன், ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘மாமனிதன்’ போன்ற படங்களையும் தயாரித்திருக்கிறார்.


சிம்புவை வைத்து படம் இயக்கவிருக்கும் யுவன்

இந்நிலையில் அடுத்து இயக்குநராகவும் உருவாகவிருக்கிறார் யுவன். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் அதுகுறித்து பேசியிருக்கிறார். தான் இயக்கப்போகும் படத்தில் தனது நண்பரான சிம்புவை ஹீரோவாக நடிக்கைவக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். சிம்பு - யுவன் கூட்டணியில் உருவான அனைத்து பாடல்களுமே ஆல் டைம் ஃபேவரிட்டாக இருப்பதால், இந்த கூட்டணியில் உருவாகும் படமும் மாஸாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘இந்தியன் 3’ - கமலின் அதிரடி முடிவு!

ஷங்கர் - கமல் கூட்டணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவான ‘இந்தியன்’ படத்தின் அடுத்த பாகத்தின் கதை மிகவும் நீளமாக இருந்ததால் அதை இரண்டு பாகங்களாக எடுக்க எண்ணிய ஷங்கர், இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை மொத்தமாக எடுத்து முடித்திருந்தார். மேலும் படம் ரிலீஸாவதற்கு முன்பே மூன்றாம் பாகம்தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் படக்குழு தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவான ‘இந்தியன் 2’ திரைப்படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களையே சந்தித்தது.


இந்தியன் 3 ரிலீஸ் குறித்து வெளியான அப்டேட்

இதனால் படத்தின் மூன்றாம் பாகத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் பரவின. ஆனால் கமல் இதற்கு ஓகே சொல்லவில்லை என்றும், தனது நடிப்பில் மற்றொரு படம் வெளியாகி ஹிட் கொடுத்தபிறகே ‘இந்தியன் 3’ வெளியாக வேண்டுமென ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். அதனால் மூன்றாம் பாகத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘அமரன்’ - ஒரு விஷுவல் ட்ரீட்!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் காஷ்மீரில்தான் நடைபெற்றது. நிறையப் படங்களில் காஷ்மீரின் அழகை கண்டுரசித்தவர்களுக்கு மேலும் ஒரு விஷுவல் ட்ரீட்டாக அமையப்போகிறது இப்படம். ஏனென்றால் இதுவரை காஷ்மீரில் படபிடிப்புக்கே அனுமதி தராத இடங்களிலெல்லாம் ஷூட்டிங் நடத்த காஷ்மீர் அரசு கமலுக்கு அனுமதி அளித்ததாம்.


விஷுவல் ட்ரீட்டாக அமையவிருக்கும் அமரன்

அதனால் காஷ்மீரில் இதுவரை பார்க்காத பல இடங்களை இப்படத்தில் பார்க்கமுடியும் என்று சொல்லப்படுகிறது. இதுவரை வெளியான ராணுவ படங்களிலிருந்து ‘அமரன்’ திரைப்படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் எனவும், சிவகார்த்திகேயனை படம் முழுக்க ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் பார்க்கமுடியும் என்றும் படக்குழு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவிருப்பதால் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அஜித் கைவசம் 4 படங்கள்!

‘துணிவு’ திரைப்படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுஇதுவரை வெளியான ராணுவ படங்களிலிருந்து ‘அமரன்’ திரைப்படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் எனவும், சிவகார்த்திகேயனை படம் முழுக்க ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் பார்க்கமுடியும் என்றும் படக்குழு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவிருப்பதால் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.யற்சி’ படத்தில் கமிட்டானார் அஜித். ஆனால் அந்த படத்தின் படபிடிப்பானது ஆமை வேகத்தில் சென்றதால் அடுத்து ஆதிக் ரவிச்சந்தர் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இறங்கினார். இந்த படத்தில் அஜித்தின் ஸ்டைல் மற்றும் லுக் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் நிலையில், எந்த படம் முதலில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்திருக்கிறது.


அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் அஜித் படங்கள்

‘குட் பேட் அக்லி’ பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், ‘விடாமுயற்சி’க்காக தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அஜித்தின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவிருக்கின்றன. இதனிடையே அஜித் 64 படத்தை சிவா இயக்கவிருப்பதாகவும், அதற்கடுத்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அஜித் கார் ரேஸ், பைக் ரேஸ் என பிஸியாக இருப்பதால் இடைவெளி விட்டுவிட்டு நடித்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் இப்போது 4 படங்களை காட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்.

தமன்னாவிடம் விசாரணை

கடந்த சில மாதங்களாகவே நடிகை தமன்னா ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களில் நடித்ததால் அமலாக்கத்துறையிடம் சிக்கி தவித்து வருகிறார். இந்தியாவில் மிகவும் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஃபேர் ப்ளே என்ற பெட்டிங் செயலியில் பார்க்க ஊக்குவித்ததாக தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பட வேலைகளில் பிஸியாக இருந்த தமன்னா நேரில் ஆஜராக சற்று கால அவகாசம் கேட்டிருந்தார்.


பெட்டிங் செயலி விளம்பர விவகாரத்தில் சிக்கித்தவிக்கும் தமன்னா

இந்நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியிலிருக்கும் அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் பெற்றோருடன் சென்று நேரில் ஆஜரானார். சுமார் 5 மணிநேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் விசாரணையில் என்னென கேள்விகள் கேட்கப்பட்டன? என்பது குறித்த எந்த விவரமும் இல்லை. இது சட்டவிரோத செயல் என்பதால் தமன்னா கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்