நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் யாஷிகா!

யாஷிகா ஆனந்தின் ‘சைத்ரா’ திரைப்பட வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Update:2023-11-04 11:12 IST

யாஷிகா ஆனந்தின் ‘சைத்ரா’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான 'துருவங்கள் பதினாறு' திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த். பிறகு விஜய் தொலைக்காட்சியில், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுபோக இவர் இன்னும் சில தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார்.


கடந்த ஆண்டு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த், நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘கடமையை செய்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது கே.மனோகரனின் மாஸ் புரொடக்‌ஷன் தயாரிப்பில், எம்.ஜெனித்குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில், யாஷிகா நடிக்கும் ‘சைத்ரா’ திரைப்படம் வரும் நவம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபாகரன் மெய்யப்பன் இசையில் வெளிவரும் இந்த படத்துக்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘சைத்ரா’ திரைப்படத்தின் கதையானது 24 மணி நேரத்தில் நடைபெறும் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்