மிகவும் எளிமையாக முடிந்த சித்தார்த் - அதிதி திருமணம்!

2021ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘மகாசமுத்திரம்’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தபோது, இவர்களிடையே காதல் மலர்ந்திருக்கிறது. பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டதிலிருந்தே டோலிவுட்டில் இதுகுறித்து செய்திகள் பரவியபோதும், ஆரம்பத்தில் பெரிதளவில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு அந்த படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டது. அதன்பிறகுதான் சித்தார்த் - அதிதி காதல் குறித்து ஊடகங்கள் பேசத் தொடங்கின.

Update:2024-09-24 00:00 IST
Click the Play button to listen to article

மிகவும் எளிமையான முறையில் நெருங்கிய சொந்தங்களின் முன்னிலையில் தனது காதலியும் நடிகையுமான அதிதி ராவை கரம்பிடித்திருக்கிறார் நடிகர் சித்தார்த். சமூக சிந்தனை மற்றும் மக்கள் நலன்மீது ஆர்வம்கொண்ட சித்தார்த் எப்போதும் பொது பிரச்சினைகள் குறித்து மீடியாக்களில் தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எப்போதும் அவர் பொதுவெளியில் அதிகம் பேசுவதில்லை. இந்நிலையில் நீண்ட நாட்களாகவே சித்தார்த் - அதிதி காதல் குறித்து வதந்திகள் பரவியபோதும் இருவரும் அதுகுறித்து வாய்திறக்காமல் இருந்தனர். திடீரென கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, காதலை உறுதிசெய்தனர். இந்நிலையில் எப்போது இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ள போகிறார்கள்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவந்த நிலையில், தற்போது திருமணம் முடிந்திருக்கிறது. சித்தார்த்-அதிதியின் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி ரசிகர்களை கவர்ந்துவருகின்றன.

தோல்வியில் முடிந்த திருமணங்கள்

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதாரி இருவருக்குமே இது இரண்டாம் திருமணம். இருவருமே பல மொழிகளில் நடித்து இந்திய திரைத்துறையில் பரிச்சயப்பட்டவர்களாக வளர்ந்திருக்கின்றனர். ஆனால் இருவருமே தங்களது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள். சொல்லப்போனால் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒரேமாதிரியான பாதையில்தான் சென்றிருக்கிறது. சித்தார்த் ‘பாய்ஸ்’ படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமான ஆரம்பகாலத்திலேயே தனது கல்லூரிகால காதலியான மேக்னா நாராயண் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இந்தியில் ‘ரங் தே பாசந்தி’ என்ற படத்தில் நடித்தபோது நடிகை சோஹா அலி கானுடன் சித்தார்த்துக்கு மிகவும் நெருக்கம் ஏற்பட்டது. பொதுவெளிகளில்கூட இருவரும் ஒன்றாக சுற்றினர். இதனாலேயே 4 வருடங்கள் ஒன்றாக சேர்ந்துவாழ்ந்த சித்தார்த் - மேக்னா இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகு, மேக்னா மறு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டதாக அப்போதே கூறப்பட்டாலும், அதன்பிறகு, மீடியா கண்களில் அவர் படவில்லை. இப்படி திருமணம் தோல்வியில் முடிந்தாலும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவந்த சித்தார்த், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். அதன்பிறகு, ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கமாக பழகிவந்த நிலையில், இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திலேபான் இந்தியா நடிகர்களான சித்தார்த் மற்றும் அதிதி ராவ் கிட்டத்தட்ட 3 வருடங்களாக காதலித்துவந்த நிலையில், தற்போது மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர்யே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்தனர். 


தங்களது முன்னாள் இணையர்களுடன் சித்தார்த் மற்றும் அதிதி

அதன்பிறகு சித்தார்த் வாழ்க்கையில் வந்தார் சமந்தா. இருவரும் காதலித்து வருவதை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், எப்போதும் ஒன்றாகவே சுற்றிவந்தனர். இவர்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் பரவிய நிலையில்தான், சமந்தா - நாக சைதன்யா காதலிப்பதாக கூறப்பட்டது. சித்தார்த்தை சமந்தா ஏன் பிரிந்தார்? என்பது குறித்த எந்த விவரமும் கிடைக்கவில்லை. சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்தபோது, சித்தார்த் தனது எக்ஸ் தளத்தில், ‘ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேறமாட்டார்கள்’ என்று பதிவிட்டிருந்தார். இதனால் சமந்தாவை அவர் மறைமுகமாக தாக்குவதாக நெட்டிசன்கள் விவாதித்தனர். சமந்தாவை பிரிந்தபிறகு, சித்தார்த் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த தகவலையும் மீடியா வெளிச்சத்திற்கு கொண்டுவராமல் இருந்ததுடன், தொடர்ந்து நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பு என சினிமாவில் மட்டும் கவனம் செலுத்திவந்தார்.

அதேபோலத்தான், நடிகை அதிதி ராவும். முதன்முதலில் தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் இந்தியில்தான் வாய்ப்புகள் கிடைத்தன. மிக இளம்வயதிலேயே சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். ஆனால் திருமணமான கொஞ்ச நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்துவந்த அதிதி, சத்தமின்றி அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன்பிறகு பாலிவுட் டிசைனராக மசாபா குப்தா என்பவரை காதலித்து அவரை திருமணமும் செய்துகொண்டார் மிஸ்ரா. அதன்பிறகு, காதல் பக்கமே போகாமல் இருந்த அதிதி, இந்தியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழிலும் நடிக்க தொடங்கினார். இப்படி பான் இந்தியா ஹீரோயினாக உருவாகிவந்த அதிதிக்கும் சித்தார்த்துக்குமிடையே காதல் மலர காரணமாக அமைந்தது ‘மகாசமுத்திரம்’.


நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வந்த சித்தார்த் மற்றும் அதிதி 

சித்தார்த் - அதிதி காதல்!

2021ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘மகாசமுத்திரம்’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தபோது, இவர்களிடையே காதல் மலர்ந்திருக்கிறது. பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டதிலிருந்தே டோலிவுட்டில் இதுகுறித்து செய்திகள் பரவியபோதும், ஆரம்பத்தில் பெரிதளவில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு அந்த படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டது. அதன்பிறகுதான் சித்தார்த் - அதிதி காதல் குறித்து ஊடகங்கள் பேசத் தொடங்கின. இருவரும் தங்களது உறவு குறித்து வாய்திறக்கவில்லை என்றாலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்ளத் தொடங்கினர். குறிப்பாக, ஏ.ஆர் ரஹ்மான் மகளின் திருமண வரவேற்பு விழா, ‘மகாசமுத்திரம்’ திரைப்பட நடிகரான ஷர்வானந்தின் நிச்சயதார்த்தம் மற்றும் ‘பொன்னியின் செல்வன் 1’ ஆடியோ வெளியீட்டு விழா என இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த மீடியாக்கள் இதுகுறித்து சித்தார்த்திடமே கேட்கத் தொடங்கினர். இருப்பினும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர் பதிலளிக்காமல் தவிர்த்துவந்தார். இருப்பினும் இந்த காதல் குறித்த ரசிகர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும்விதமாக, இருவரும் தங்களுடைய சோஷியல் மீடியா போஸ்ட்டுகளுக்கு மாறி மாறி லைக், கமெண்ட் செய்துவந்தனர்.


வெளிநாட்டு பயணத்தின்போது...

இந்நிலையில், கடந்த ஆண்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டான ‘மாலை டும் டும்’ பாடலுக்கு இந்த ஜோடியும் நடனமாடி ரீல்ஸ் பதிவிட்டது. இதனால் இருவரும் லிவ் -இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், ஒரே வீட்டில் வசித்துவருவதாகவும் வதந்திகள் பரவின. அதன்பிறகு ஹோட்டல்கள், ஏர்போர்ட், வெளிநாட்டு பயணங்கள் என தங்களது காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தினர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் தங்களது காதலை வெளியே சொல்லாமல் இருந்துவந்த இந்த ஜோடி தெலங்கானாவிலிருக்கும் வனபர்த்தி கோவிலுக்கு ஒன்றாக சென்றிருந்த புகைப்படங்கள் வெளியாகின. அதனை பார்த்த ரசிகர்களும் மீடியாக்களும் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறிய நிலையில், ஓரிரு நாட்களில், அதாவது மார்ச் 28, 2024 அன்று நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். மோதிரம் அணிந்த கையுடன், ‘He said Yes' மற்றும் 'She said Yes’ என இருவரும் மாறி மாறி பதிவிட்டனர். இதனால் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சைலண்ட்டாக நடந்து முடிந்த திருமணம் 

விரைவில் தங்களது திருமணம் எப்போது? என்பது குறித்து அறிவிப்பார்கள் என காத்திருந்த ரசிகர்களுக்கு திருமண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கின்றனர் சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி. செப்டம்பர் 16ஆம் தேதி தெலங்கானாவின் வனபர்த்தி மாவட்டத்திலுள்ள 400 வருட பழமையான ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோவிலில் வைத்து இவர்களுடைய திருமணம் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது. லேசான தங்க ஜரிகை வேலைப்பாடுள்ள தாவணி மற்றும் வேஷ்டி - சட்டை என இருவரின் திருமண உடைகளும்கூட எளிமையாக இருந்தது. தென்னிந்திய பாரம்பரிய முறையப்படி நடந்தேறியிருக்கும் இவர்களது திருமண புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவருகின்றன.


சித்தார்த் - அதிதியின் திருமண புகைப்படம்

அதிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீங்கள் எனது சூரியன், எனது சந்திரன் மற்றும் என்னுடைய எல்லா நட்சத்திரங்களும்கூட...” என கேப்ஷனிட்டு தன்னுடைய அன்பை பொழிந்து, Mrs & Mr அத்து - சித்து என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த சோனாக்‌ஷி சின்ஹா, துல்கர் சல்மான், ஹன்சிகா, அனன்யா பாண்டே உள்ளிட்ட திரையுலகினர் பலரும் புதுமண தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். முதல் திருமண முறிவிற்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருமண வாழ்வுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் சித்தார்த்தை அவருடைய ரசிகர்கள் மனதார வாழ்த்தி வருகின்றனர். திருமணம் முடிந்த கையோடு கணவன் - மனைவி இருவரும் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கின்றனர்.

அதில், அதிதியிடம் தனக்கு பிடிக்காதது என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, காலை எழுந்தவுடன் அவர் தன்னை எழுப்புவதுதான் என்றும், அப்படி பாதி தூக்கத்தில் எழுப்பும்போது அந்த நாளே நன்றாக இருப்பதில்லை என்றும் கூறியிருக்கிறார் சித்தார்த். திருமணமான ஒருசில நாட்களிலேயே புது மாப்பிள்ளைக்கு எவ்வளவு தைரியம்? என கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள். பார்ப்பதற்கு எப்போதுமே மிகவும் இளமையாக தோற்றமளிக்கும் சித்தார்த்துக்கு வயது 45 மற்றும் அதிதிக்கு 37.

Tags:    

மேலும் செய்திகள்