15 வருட காதலனை கரம்பிடித்த கீர்த்தி சுரேஷ் - வாழ்த்திய பிரபலங்கள்!

அனிருத்துடன் சேர்த்து பேசப்பட்டார். ஆனால் இம்முறை கீர்த்தியின் அப்பாவே அந்த தகவல் முற்றிலும் பொய்யானது என கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து கீர்த்தியும் தனக்கு திருமணம் நடக்கும்போது தானே அறிவிப்பேன் என்று கூறிவிட்டார். அதன்பிறகு அவரது திருமணம் குறித்து எந்த பேச்சும் வெளிவராத நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது காதலரை அறிமுகப்படுத்தினார் கீர்த்தி.

Update:2024-12-17 00:00 IST
Click the Play button to listen to article

சில நாட்களாகவே சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கிறது நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படங்கள். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் இவர் ‘பேபி ஜான்’ படத்தின்மூலம் தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானதிலிருந்தே கடுமையாக விமர்சிக்கப்பட்டுவந்தார். அதற்கு காரணம், கீர்த்தி காட்டிய கவர்ச்சிதான். அந்த பேச்சு அடங்குவதற்கு முன்பே அவருடைய திருமணம் குறித்து அறிவித்தார். கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு வதந்திகள் பரவிவந்த நிலையில், அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அவரே தனது காதலரை சமூக ஊடகம் மூலம் பொதுவெளியில் அறிமுகப்படுத்தினார். அறிமுகப்படுத்திய கையோடு திருமண தேதி மற்றும் பத்திரிகையும் சமூக ஊடகங்களில் பரவி ட்ரெண்டாகின. கீர்த்தியின் காதலர் கிறிஸ்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்காக அவர் மதம் மாறுகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் வைத்து தனது காதலர் ஆண்டனி தட்டிலை கரம்பிடித்தார் கீர்த்தி சுரேஷ். இவர்களுடைய திருமணம் முதலில் இந்து முறைப்படியும், பிறகு கிறிஸ்தவ முறைப்படியும் நடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், கீர்த்தி வீட்டு முறைப்படி தமிழ் சடங்கு சம்பிராதாயங்களுடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இவர்களுடைய திருமணத்தில் விஜய், திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். கீர்த்தி - ஆண்டனி இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடந்திருக்கிறது. அதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.

கீர்த்தி திருமணம் குறித்து பரவிய வதந்திகள்!

பொதுவாக நடிகர் நடிகைகளைப் பற்றி பல்வேறுவிதமாக வதந்திகள் பரவும். ஆனால் கீர்த்தி சுரேஷுக்கோ அப்படியில்லை. கீர்த்தியையும் திருமண வதந்தியையும் பிரிக்கவே முடியாது என்பதுபோல் இவரை திருமணம் செய்கிறார், அவரை காதலிக்கிறார் என்று தொடர்ந்து வதந்திகள் பரவிக்கொண்டே இருந்தன. குறிப்பாக, கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் தனது பள்ளிக்கால நண்பரை காதலித்துவருவதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் வதந்திகள் பரவிய நிலையில் அதை ஆஃப் செய்யும்விதமாக பரவியது மற்றொரு வதந்தி. கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகனை கீர்த்தி காதலிப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்தெல்லாம் கீர்த்தி தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இசையமைப்பாளர் அனிருத்துடன் கீர்த்தி எடுத்த புகைப்படங்கள் வெளியான நிலையில், இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது.


ஆண்டனி தட்டிலை அறிமுகப்படுத்திய கீர்த்தி

அந்த வதந்தி அடங்குவதற்குள்ளாகவே ‘சர்க்கார்’ படத்தில் நடித்தபோது விஜய்யுடன் நெருக்கம் ஏற்பட்டதாக செய்திகள் பரவின. இப்படித் தொடர்ந்து நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தொழிலதிபருடன் காதல் மற்றும் ரகசிய திருமணம் என தொடர்ந்து வதந்திகள் பரவிய நிலையில், மீண்டும் அனிருத்துடன் சேர்த்து பேசப்பட்டார். ஆனால் இம்முறை கீர்த்தியின் அப்பாவே அந்த தகவல் முற்றிலும் பொய்யானது என கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து கீர்த்தியும் தனக்கு திருமணம் நடக்கும்போது தானே அறிவிப்பேன் என்று கூறிவிட்டார். அதன்பிறகு அவரது திருமணம் குறித்து எந்த பேச்சும் வெளிவராத நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது காதலரை அறிமுகப்படுத்தினார் கீர்த்தி.

15 வருட ரகசிய காதல்

கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் தன்னைப்பற்றி பல்வேறு வதந்திகள் பரவியபோதும், தனது காதல் குறித்து பொதுவெளியில் வாய்திறக்காமல் மௌனம் காத்துவந்தார். இதனிடையே கடந்த சில மாதங்களாக கீர்த்தியின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துவருவதாக தகவல்கள் பரவிவந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்தான் தனது காதலர் எனவும், இருவரும் 15 வருடங்களாக காதலித்துவருவதாகவும் தனது சமூக ஊடக பக்கத்தில் ஆண்டனி தட்டில் என்பவரை அறிமுகப்படுத்தினார் கீர்த்தி. 


இந்து சம்பிரதாயப்படி நடந்த கீர்த்தி - ஆண்டனி திருமணம்

கொச்சியைச் சேர்ந்த பெரிய தொழிலதிபரான ஆண்டனிக்கு பல்வேறு நாடுகளில் பிசினஸ் இருப்பதாக சொல்லப்படுகிறது. தென்னிந்திய சினிமாவைத் தாண்டி தற்போதுதான் பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறார். அதற்குள் திருமணம் செய்கிறாரே, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பாரா? என்று கீர்த்தியின் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், தொடர்ந்து நடிப்பார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் வைத்து திருமணம் நடக்கவிருப்பதாக பத்திரிகை ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வைரலானது.

அதில் குறிப்பிட்டிருந்த படி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருக்கிறது கீர்த்தி - ஆண்டனி திருமணம். ஆண்டனி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் கீர்த்தி மதம் மாறப்போகிறார் என செய்திகள் பரவின. ஆனால் கீர்த்தி வீட்டு பாரம்பரிய முறைப்படி இந்து சடங்கு, சம்பிரதாயங்களுடன் நடந்து முடிந்திருக்கிறது இவர்களுடைய திருமணம்.

மடிசார் புடைவை - வேஷ்டி சட்டையில் புதுமணத் தம்பதியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வைரலான நிலையில், அதனைத் தொடர்ந்து டிசம்பர் 15-ஆம் தேதி மீண்டும் கிறிஸ்தவ முறைப்படியும் மற்றொரு திருமணம் நடந்தது. அதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு புதுமணத் தம்பதிகளை வாழ்த்தியுள்ளனர்.


கீர்த்தி சுரேஷை பெண் கேட்டுச்சென்ற விஷால்?

கீர்த்தியை காதலித்த விஷால்

கீர்த்தியின் திருமணத்தைத் தொடர்ந்து அவரை நடிகர் விஷால் பெண் கேட்டுச்சென்ற தகவல்களும் ஒருபுறம் ட்ரெண்டாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வந்த விஷால், நடிகர் சங்க சர்ச்சைகளில் சிக்கியபிறகு திரையிலும் சறுக்கலை சந்தித்திருக்கிறார். குறிப்பாக, வரலட்சுமி சரத்குமாரை காதலித்து ஏமற்றியதாக சொல்லப்படும் நிலையில், அவர் மும்பையைச் சேர்ந்த பிசினஸ்மேன் நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இதனிடையே ‘சண்டக்கோழி’ இரண்டாம் பாகத்தில் சேர்ந்து நடித்தபோது விஷாலுக்கு கீர்த்தியை மிகவும் பிடித்துப்போனதால் படத்தின் இயக்குநர் லிங்குசாமியை வைத்து கீர்த்தியின் வீட்டாரிடம் பெண் கேட்டதாகவும், ஆனால் அவர் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கீர்த்தியின் பெற்றோர் தெரிவித்துவிட்டார்களாம். இதைக் கேட்ட விஷால், இந்த தகவல் எதையும் வெளியே கசியவிடாமல் பார்த்துக்கொண்டதாக தற்போது செய்திகள் பரவிவருகின்றன.


கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் ஜொலித்த விஜய்

தனி விமானத்தில் விஜய் - திரிஷா!

ஆண்டனி - கீர்த்தி திருமணம் கோவாவில் வெகு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு பேச்சிலர் பார்ட்டி கொடுத்துள்ளார் கீர்த்தி. அதில் அவருடைய நெருங்கிய நண்பர்கள், திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. கீர்த்தியின் திருமணத்தில் விஜய், திரிஷா, நானி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணத்திற்காக, விஜய்யும், திரிஷாவும் தனி விமானத்தில் கோவா சென்றுள்ளனர். ஏற்கனவே திரிஷாவுக்கும், விஜய்க்கும் இடையே உறவு இருப்பதாகவும், அதனால்தான் அவர் தன்னுடைய குடும்பத்தை பிரிந்து வாழ்வதாகவும் வதந்திகள் பரவிவரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒரே விமானத்தில் சென்ற வீடியோக்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன. திருமணத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். இந்த திருமணத்திற்கு தான் தயாரான புகைப்படங்கள், மணமக்களின் புகைப்படம் மற்றும் விருந்து இலை ஆகிய புகைப்படங்களை தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார் திரிஷா. இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற இந்த திருமணத்திற்காக கீர்த்தி சுரேஷ் சில நூறு கோடிகள் செலவு செய்திருப்பதாகவும், அவருடைய சொத்துமதிப்பு 500 கோடியிலிருந்து 1000 கோடிவரை இருக்கும் என்ற மற்றொரு தகவலும் வெளியாகி ரசிகர்களை வாய்பிளக்க வைத்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்