“இந்தியன் 2 பட டப்பிங்கில் கமல்ஹாசன்”

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனின் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் 2, திரைபடத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன்.

Update:2023-10-10 16:42 IST

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் 'இந்தியன் 2', திரைபடத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன்.

1996 ஆம் ஆண்டு கமல் மற்றும் இயக்குநர் ஷங்கரின் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன். இந்த படம் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. எனவே அதனைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தை மீண்டும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிகப் பிரம்மாண்டப் பொருட்செலவில் இயக்குநர் சங்கர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் இதில் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படமானது ரெட் ஜெயன்ட் மூவீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் அமைக்கப்பட்ட படப்பிடிப்புத் தளத்தில் 'இந்தியன் 2' க்கான படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகள் தொடங்கியுள்ளது. அதில் நடிகர் கமல் ஹாசன் இத்திரைப்படத்திற்கான டப்பிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது குறித்த வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. ஏறக்குறைய திரைப்படதிற்கான வேலைகள் அனைத்தும் இறுதிக் கட்டத்திற்கு வந்த நிலையில் 'இந்தியன் 2' திரைப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரையில் வெளியிட திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்