வழக்குகளில் ஜெயிப்பீர்கள்

Update: 2024-02-05 18:30 GMT

2024 பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை தேடுபவர்கள், வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அனைவருக்கும் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கும். வங்கி கடன் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வழக்குகளில் ஜெயிப்பீர்கள். நேரடியான அதே நேரம் மறைமுகமான எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். காதலில் வெற்றியடைவீர்கள். விவாகரத்திற்கு விண்ணப்பித்து இருந்தால் கிடைக்கும். சொந்த தொழில் பரவாயில்லை. திருமண உறவு சுமாராக இருக்கும். உயர்கல்வி சிறப்பாக உள்ளது. உற்பத்தி துறையில் இருந்தால் உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கும். வீடு, இடம், வண்டி, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். இந்த வாரம் முழுவதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். மகாலட்சுமியை வழிபடுவதால் ஏற்றம், முன்னேற்றம் உணடாகும்.    

Tags:    

மேலும் செய்திகள்