குழந்தை பாக்கியம் உண்டு

Update:2024-10-01 00:00 IST

2024 அக்டோபர் 01-ஆம் தேதி முதல் அக்டோபர் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. கையில் பணம், தனம் இருக்கிறது. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். அதன் மூலம் நல்லதொரு வாய்ப்பு, வருமானம், முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கும். உங்கள் முயற்சிகளில் நிறைய தடைகள், பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். அதனால் பெரிய அளவில் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். ஏதோவொரு செய்தியையோ, தகவலையோ எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்து வரவில்லை என்றால் நல்லதற்கு என்று எடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற மனநிலைக்கு இந்த வாரம் வாருங்கள். அதுதான் நல்லதும் கூட. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. செயற்கை முறை கருத்தரித்தலுக்கும் சிகிச்சை எடுத்து இதுவரை வெற்றி பெறாமல் இருந்தால் இந்த வாரம் வெற்றி பெறும். கல்வியை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலையை பொறுத்தவரை வேறு அலுவலகம் மாற நினைத்தவர்கள் மாறிக்கொள்ளலாம். நீங்கள் செய்யும் வேலையை பொறுமையாகவும், நிதானமாகவும் பாருங்கள். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். இல்லையென்றால் வேலையில் நீங்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய வாரமாக இருக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றியடையும். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் சனி பகவானை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்