அடக்கி வாசியுங்கள்

Update:2025-03-18 00:00 IST

2025 மார்ச் 18-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். முறிந்த காதல் மீண்டும் சேரும். வரவுகளுக்கு ஏற்ற செலவுகளும் இந்த வாரத்தில் இருக்கிறது. பெரிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எல்லாமே வெற்றி பெறுவது போன்ற தோற்றம். ஆனால், எதுவும் சாதகமாக இல்லை. அதனால் எல்லாவற்றிலும் கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். அடக்கி வாசியுங்கள். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. சொத்துக்கள் எதுவும் விற்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். நடப்பது அனைத்தும் நன்மைக்கே. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்‌ஷனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. அம்மாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பொறுமையாக இருங்கள். எல்லாமே லாபத்தை கொடுப்பது போன்ற தோற்றம். ஆனால், லாபம் உங்கள் கைக்கு பணமாகவோ, பொருளாகவோ வருவதில் நிறைய போராட்டங்கள் இருக்கிறது. அதனால் எல்லாவிதமான யூக வணிகங்களிலும் அடக்கி வாசியுங்கள். வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. யாருக்கும் கடன் கொடுத்தால் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த வாரம் முழுவதும் சிவன் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.   

Tags:    

மேலும் செய்திகள்