போக்குவரத்தில் எச்சரிக்கை

Update:2025-04-08 00:00 IST

2025 ஏப்ரல் 08-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கூடிய வரை எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கியே இருங்கள். இறையருளை கூட்டுங்கள். உங்கள் தொழில் பெரிய அளவில் டெவலப் ஆகும். கூட்டுத்தொழிலில் பார்ட்னருக்காக உழைப்பீர்கள். ஆனால், அவர் உங்களுடன் கருத்து வேறுபாட்டில் இருப்பார். கடன் வாங்குவதோ, கொடுப்பதோ இரண்டும் வேண்டாம். அரசாங்கம் தொடர்பான அத்தனை விஷயங்களிலும் கவனமாக இருங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சுமாரான பலன்கள்தான். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். எல்லாவிதமான யூக வணிகங்களும் உங்களுக்கு சாதகமாக இல்லை. எல்லாமே லாபத்தை கொடுப்பது மாதிரியான ஒரு தோற்றம். ஆனால், உங்கள் பணம் முடங்குவதற்கு, லாஸ் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உங்கள் கையில் பணம் இருந்தாலும், தேவையற்ற செலவினங்களும் உண்டு. எல்லா விஷயங்களிலும் கவனமாக இருங்கள். போக்குவரத்து, வண்டி, வாகனங்கள் இவற்றில் எச்சரிக்கையாக சென்று வாருங்கள். பென்ஷன், பிஎஃப்., கிராஜுவிட்டி வராமல் இருந்தால் வரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரம் முழுவதும் சிவன் மற்றும் பெருமாளை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்