எல்லாவற்றிலும் கவனம்

Update:2025-04-01 00:00 IST

2025 ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எல்லாவற்றிலும் அடக்கி வாசிப்பது நல்லது. போக்குவரத்து, வண்டி, வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக இருங்கள். ஒவ்வொரு விஷயத்தையும் செய்யும் பொழுது நன்கு யோசித்து செயல்படுங்கள். தேவையில்லாத எந்த சிந்தனைகளும் வேண்டாம். அரசாங்கம் மற்றும் உறவுகள் விஷயத்திலும் கவனமாக இருங்கள். உறவுகளால் தேவையற்ற பிரச்சினைகள், மனவருத்தங்கள் இருக்கிறது. நண்பர்களாலும் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள், போராட்டங்கள் இருக்கின்றன. விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு ஷேர் மார்க்கெட் போன்ற எந்த யூக வணிகங்களிலும் முதலீடு செய்ய வேண்டாம். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் கவனமாக இருங்கள். ஏனென்றால் தேவையில்லாதவற்றில் தலையிட்டு அசிங்கங்களை, அவமானங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. சிம்ம ராசியை பொறுத்தவரை இந்த வாரம் எல்லாவற்றிலும் கவனம் தேவை. உங்கள் வேலையை பொறுமையாகவும், நிதானமாகவும் பாருங்கள். தொழில் செய்பவர்கள் அனைவருக்கும் பரவாயில்லை. இந்த வாரம் முழுவதும் குலதெய்வத்தை கும்பிடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.      

Tags:    

மேலும் செய்திகள்